காதலிக்கு சொல்லக்கூடாத கதை

நான் பத்தாம் அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும் போது இந்து சமயப்பாடத்தில் இளையான்குடிமாற நாயனாரின் கதையொன்று இருந்தது. எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கதையை சொல்லிடுறேன். இளையான்குடிமாறநாயனார் மிகத்தீவிரமான சிவபக்தர். எம்பெருமான் மீது மிகுந்த அன்புடையவர். பசியென்றுவரும் சிவனடியார்களுக்கு இல்லன்னு சொல்லாம வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார். எந்த சூழ்நிலையிலும் தவறாமல் அப்பணியினை மேற்கொண்டு வருகிறார். கடவுளின் அருளால் அவருக்கு மேலும், மேலும் செல்வமும் வளமும் பெருகுது. இப்படியெல்லாம் சுமூகமாக போய்ட்டு இருக்கும் போது சிவபெருமான் அவரின் பக்தியை சோதிச்சு பார்க்க முடிவுபண்ணுறாரு. சிவனுக்கு இதுதான் வேலையே! தன்னுடைய தீவிர பக்தர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுத்து டார்ச்சர் பண்ணுவாரு. 

இவர் கொடுக்குற கஷ்டத்தை தாங்க முடியாமல் அவர்கள் வேறு மதத்துக்கு மாறிப்போகாமல் இருந்தது பெரிய விஷயம். அந்த அளவுக்கு டார்ச்சர் லெவல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணமாக சொல்லி நாயன்மார்கள் போகமாட்டாங்க. சிவன் மேல்  தீராக்காதல் அவர்களுக்கு. (ஆனால் குடியானவர்கள் யாரும் அப்படி போகவும் முடியாது. இந்த காலம் மாதிரியில்ல அப்போ, மன்னர் ஆட்சி. மன்னர் எந்த மதமொ அதையே தான் குடிகளும் தொடரனும். மீறினால் தலை சீவப்படும். மன்னர் ஆட்சிக்கும் சர்வதிகாரத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டிலும் எதிர்த்து கேள்வி கேட்கவே முடியாது)

எந்த துன்பம் வந்த போதிலும் கடைசி வரை தன் மீது பக்தியாகவும். சிவனடியார்களுக்கு அன்னமிடும் திருபணியை செய்வதில் உறுதியாகவும் இருக்காறான்னு சோதிச்சு பார்க்க எண்ணிய சிவபெருமான் தொடர்ந்து நாயனாருக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தை கொடுத்து. செல்வமெல்லாம் கரைந்து போகச்செய்து கிட்டத்தட்ட பிச்சைக்கார மட்டத்துக்கு கொண்டுவந்து விட்டுவிட. அப்போவும் நம்ம ஆளு விடுறமாதிரி தெரியல. சிவனுக்கே டப்பு கொடுக்குறமாதிரி வீட்டுல இருக்க பொருட்களை கூட ஒன்றொன்றாக விற்று அன்னமிடும் பணியை தொடர்ந்து நடத்திட்டுவாராரு. அந்த துன்பத்திலும் நாயனாரோட மனைவி மனம் கோணாமல் திருப்பணிகளில் ஒத்தாசையாக இருக்காங்க. I like her very much, such a nice lady ! மன்னிக்கனும், அவங்க பெயர் நினைவுக்கு வருதுயில்ல.

இப்பே கிளைமாக்ஸ் 

ஒரு நாள் இரவு கடும் மழை அடிச்சு ஊத்துது. இளையான்குடிமாற நாயனாரும் அவர் மனைவியும் சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாமல். பட்டினியா உறங்க போகும் பொழுது யாரோ கதவை தட்டுறாங்க. திறந்து பார்த்தால் சிவனடியார் ஒருத்தர். நெடுந்தூரப்பயணமாக அவ்வழியே போகும் பொழுது மழையில் மாட்டிக்கொண்டதாகவும். நாயனாரின் விருந்தோம்பலை பற்றி கேள்விப்பட்டு அன்று இரவு பசிக்கு உணவருந்தி, இளைப்பாறிட்டு காலையில் பயணத்தை தொடரும் எண்ணத்தில் வந்து இருப்பதாக சொல்லுவாரு. நாயனாருக்கு இப்பே ஏதாச்சும் செய்து சிவனடியாருக்கு சாப்பாடு போட்டே ஆகணும். உடனே எதோ யோசனை வந்தவாறு இரவே வயலுக்கு சென்று காலையில் விதைத்த நெல்லையெல்லாம் சேகரிச்சு எடுத்துக்கிட்டுவந்து இடுச்சி அரிசியாக்கி கொடுத்துட்டு. கறிக்கு வீட்டுக்கு பின்னுக்கு முளைச்சி இருந்த கீரையை பறித்து கொண்டுவந்து கொடுத்து மனைவியிடம் சமைக்க சொல்ல. இப்பே விறகு இல்லை. உடனே வீட்டு கூரையில் இருந்து சில மரக்கம்புகளை உடைத்து கொடுத்து ஒருவாறு உணவை தயார் செய்து  சிவனடியாருக்கு மனம்நோகாமல் வயிறார சாப்பிட கொடுத்துட்டு இருவரும் பட்டினியாக இருங்காங்க. Really great people! அப்பொழுதுதான் அந்த அற்புதம் நிகழுது! சிவனடியார் ரூபத்தில் வந்த சிவபெருமான் நாயனாருக்கும் மனைவிக்கும் காட்சி தந்து அவரின் பக்தியையும் விருந்தோம்பலை மெச்சி இருவருக்கும் முக்தியை கொடுக்குறாரு. இதுதான் கதை.

இந்த கதையை நான் இப்ப சொல்லுறதுக்கு ஒரு சுவையான காரணமிருக்கு. 
முன்பு ஒரு காலத்துல நானும் அவளும் ரொமேன்டிக்கா பேசிட்டு இருக்கும் பொழுது ஒரு கதை சொல்லுப்பான்னா. நானும் இந்த கதையை சொன்னேன். முடிக்கும் தருவாயில் அவள் முகம் அஷ்டகோணலாக மாறிக்கொண்டே வந்தது. உன்கிட்ட கதைக்கேட்டேன் பாரு எனக்கு தேவைதான்னு சலிச்சுகிட்டா! எனக்கு புரியல... அதோட எல்லாம் புட்டுக்கிச்சு.
பிறகு தான் நான் யோசித்து பார்த்தேன். எத்தனையோ  ரொமான்டிக் கதைகள் தெரிந்திருந்தும் அதை சொல்லாம ஏன் இந்தக்கதையை சொன்னேன்னு?  
கூடவே இன்னோரு விஷயமும் நினைவுக்கு வந்தது. அடிக்கடி அவள் என்னை நல்லா பார்த்துகிருவியான்னு கேட்கும் பொழுதெல்லாம். நான் கஞ்சியோ கூலோ ஊத்தி உன்னை சந்தோசமா வச்சிருப்பேனு சொல்லுவேன். திரும்பவும் அவள் முகம் அஷ்டகோணலாகமாறும். அவள் சொல்லாம கொள்ளாமல் ஓடி போனதுக்கும் இந்த சம்பவங்களுக்கு இடையே எதுவும் தொடர்பு இருக்குமான்னு யோசிச்சுட்டு இருக்கேன். 

நீதி: காதலிக்கு கதை சொல்லும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.  

நரேஷ் 10-25-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I