Van Diemen's Land (2009) நரகப்பயணம்

(Van diemen's land இன்றைய Tasmania Sarah Island இல் உள்ள ஓர் இடம்) ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், 1822ஆம் ஆண்டில், Van diemen's land என்னும் ஒரு தீவில் உள்ள சிறையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம். அலெக்சாண்டர் பியேர்ஸ் என்பவனும் அவனுடன் சேர்ந்து ஏழு குற்றவாளிகளும், அந்த கொடுமையான சிறைச்சாலையில் இருந்து தப்பிப் போகிறார்கள். டாஸ்மானியாவின் அடர்ந்த வனாந்திரத்தின் ஊடாக கிழக்கு பக்கம் உள்ள மனிதக் குடியிருப்புக்கு போய்ச் சேருவது தான் திட்டம். "Survaival is not an easy game to play" என்ற கூற்றிற்கு இணங்க ஆரம்பத்திலிருந்த உற்சாகமும், தையிரியமும் பயணப்பட ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது. அடை மழை, பனி, மேடு பள்ளம், மலை, கடுங்குளிர் என்று அந்த அடர்ந்த வனாந்திரம் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் துவங்குகிறது. போகப்...., போகப்... முடிவே இல்லாமல் விரிந்துக் கொண்டு போகிறது. கைவசமிருந்த சொற்ப உணவும் தீர்ந்துப் போக பசி, மயக்கம், கலைப்பு எல்லாம் ஒன்றாச் சேர்ந்து வாட்டி வதைக்கிறது. கால்களை தூக்கி ஓரு அடி முன் வைக்க முடியாத அளவுக்கு சோர்ந்து துவண்டுப் போக...