போக புத்தகம்
ஆசிரியர்: போகன் சங்கர் நான் படித்து சுவைத்து எழுத தவறிய புத்தகம். வாசிக்கும் புத்தகங்களை பற்றியெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். அது இலகுவான காரியமில்லை. நேரம், மனநிலை எல்லாம் கூடி வரவேண்டும். "சில நேரம் என்னடா வாழ்கை இதுனு" சோர்ந்து போகும் தருணங்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து விடுகிறது. இந்த புத்தகத்தை படித்து நாட்கள் கடந்த பின்பும் இதை பற்றி சிறு பாராகூட எழுதாமல் இருப்பது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எல்லோரித்திலும் போய்ச் சேரவேண்டிய சிறந்த படைப்பு. வாசிப்பை மறந்த நம் இளம் தலைமுறையைகூட இழுத்து மூழ்கடித்துவிடும் லாவகமான மொழிநடை போகனுக்கு. இப்பொழுது எனக்கு பிரியமான எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். அவரின் படைப்பில் சுவாரஸ்யத்திற்கு எப்பொழுதுமே குறைவில்லை. எழுத்தில் நகைச்சுவையை புனைவதில் மனிதரை அடித்துக் கொள்ளமுடியாது. "போக புத்தகத்தை" வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போகும். அதே போல சில இடங்களில் மனம் கனத்து, கண்கள் குளமாகும். இதுவரை நீங்கள் படித்திராத வித்தியாசமான புத்தகமிது. சிறுகதை, நாவல் என்ற வரையறைக்கு...