போக புத்தகம்

ஆசிரியர்: போகன் சங்கர் 

நான் படித்து சுவைத்து எழுத தவறிய புத்தகம். வாசிக்கும் புத்தகங்களை பற்றியெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். அது இலகுவான காரியமில்லை. நேரம், மனநிலை எல்லாம் கூடி வரவேண்டும். 
"சில நேரம் என்னடா வாழ்கை இதுனு" சோர்ந்து போகும் தருணங்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து விடுகிறது. இந்த புத்தகத்தை படித்து நாட்கள் கடந்த பின்பும் இதை பற்றி சிறு பாராகூட  எழுதாமல் இருப்பது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எல்லோரித்திலும் போய்ச் சேரவேண்டிய சிறந்த படைப்பு. வாசிப்பை மறந்த நம் 
இளம் தலைமுறையைகூட இழுத்து மூழ்கடித்துவிடும் லாவகமான மொழிநடை போகனுக்கு. இப்பொழுது எனக்கு பிரியமான எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார்.

அவரின் படைப்பில் சுவாரஸ்யத்திற்கு எப்பொழுதுமே குறைவில்லை. எழுத்தில் நகைச்சுவையை புனைவதில் மனிதரை அடித்துக் கொள்ளமுடியாது. 
"போக புத்தகத்தை" வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போகும். அதே போல சில இடங்களில் மனம் கனத்து, கண்கள் குளமாகும். இதுவரை நீங்கள் படித்திராத வித்தியாசமான புத்தகமிது. சிறுகதை, நாவல் என்ற வரையறைக்குள் கட்டுப்படாது. புனைவும், அபுனைவும்
சேர்ந்த படைப்பு. நிஜமா, கற்பனையா  என்பதை வாசகனின் தேடலுக்கே விட்டுவிட்டார். இதில் உள்ள எழுத்து வடிவங்கள் பெரும்பாலும் அவர் இணையத்தில் எழுதியவை.
பின்பு தொகுக்கபட்டு நூலாக வெளிவந்துள்ளது. ஆரம்பம் தொடக்கம் முடிவு மட்டும்சோர்வே தட்டாது. கட்டாயம் படித்து விடுங்கள்.

இலக்கியத்தை இப்படியும் கையாளலாம். அது மகா சமுத்திரம். ஆசான்கள் கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எல்லைகளை வகுக்க முடியாது என்பது என் எண்ணம்.

நரேஷ் 
04-12-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I