சூஃபியும் சுஜாதேயும்

மொழி: மலையாளம் "என் உயிரை உன்னுடன் எடுத்து சென்றால், நான் என்ன செய்வேன்?" சூஃபியிசத்தை பற்றி வாசித்து உணர்த்திருக்கிறேன். ரூமியின் கவிதைகளை படிக்கும் போதும் அனுபவித்து இருக்கிறேன். அதையே படமாக இரண்டு மணிநேரம் திரையில் பார்த்த அனுபவம் மாறுப்பட்ட உவகையை அளித்தது. ஓர் இந்து பெண்ணுக்கும், சூஃபி துறவிக்கும் இடையிலான காதலே இந்த படம். ஆனால் இது வெறும் கதையாக இல்லாமல் அமரகாவியமாகி போனது துயரம்தான். இதில் சூஃபி பள்ளியில் பாங்கு ஓதும் போது " அல்லாஹ் கூ அஃபர் அல்லாஹ்...! " என்ற அந்த கணீர் குரல் காதில் விழும் தருணத்தில் உணர்ந்த பேரின்பத்தை வார்த்தைகளில் விபரிக்க முடியாது. பாடல்களும் பின்னணி இசையும் தான் படமே, ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் பேரழகு! ஓர் இடத்தில் சூஃபி நடனத்தை டாப் அங்கிள் ஷாட்டில் படமாக்கியது அற்புதம்!அதுமட்டுமல்ல சுஜாதேயும், சூஃபியும் வரும் இடங்கள் எல்லாமே ஓவியம்தான். Aditi Rao ஒரு வார்த்தை கூட பேசாமல் படம் முழுவதும் முகபாவனைகளிலே உணர்வுகளை சிறப்பாக வெளிக...