கருப்பு மரணம்

 
2020ம் ஆண்டு உயிர்கொல்லி 
கிருமிகளின் வருடம் போல, ஏற்கனவே கொரோனா தன் பங்கிற்கு வைத்து செய்து கொண்டிருக்கிறது. வெக்சின் வரும் 
மட்டும், உயிருக்கு உத்தரவாதம் 
கிடையாது. தற்போதைய நிலவரப்படி கொரோனா தடுப்பு மருந்து பாவனைக்கு 
வர குறைந்தது அடுத்த வருடமாகும். 
இந்த லட்சனத்தில் சீனாவில் இம்மாதம் மட்டும் அடுத்தடுத்து இரண்டு உயிர்கொல்லி நோய் தொற்றுக்களை அடையாளம் கண்டுள்ளார்கள். 
பன்றி பண்ணையில் இருந்து 
கோவிட்-19 நிகரான மோசமான வைரஸ் பரவல் இனம் காணப்பட்டது, ஆனால் அது இதுவரை மனிதர்களுக்கு பரவதொடங்கவில்லை. 
ஒருவேளை மீறி பரவினால் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அழிவை ஏற்படுத்த கூடியது. இந்த செய்தியை படித்து சரியாக ஒருவாரம் கூட கடக்க முன்பு நேற்று புதிதாக புபோனிக் வகை பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு மேய்ப்பவர் ஒருவரை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மங்கோலியாவின் பயனுர் என்னும் 
நகரில் இனங்கண்டு உள்ளார்கள். 
தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நிலை மோசமான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். இது பாக்டீறியாவினால் பரவும் கொள்ளைநோய்.

14ம் நூற்றாண்டில் கருப்பு மரணம் என்றழைக்கப்பட்ட இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என உலகம் முழுவதும் பரவி ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது. சில நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் 
பரவி துவம்சம் செய்து விட்டது. 
1665 இல் லண்டன் நகரை தாக்கிய இந்த தொற்று நகரில் வசித்த ஐந்தில் ஒரு பகுதியினரை காவு வாங்கியது. அத்துடன் முடியவில்லை, மீண்டும்  19ம் நூற்றாண்டிலும் பரவி இந்தியா, சீனாவில் ஒன்றரை கோடி பேரை கொன்று குவித்தது. 
மத்திய காலத்தில் நோய் கிருமிகள் 
என்று கண்ணுக்கு புலப்படாத பயங்கர எதிரி இருப்பதே நமக்கு தெரியாது. கடவுளின் கோபம், தேவதைகளின் சாபம் என பூசாரிகளும், மதகுருமார்களும் சொன்னதை நம்பி கொண்டிருந்த காலக்கட்டம். நோயிலிருந்து தப்பிக்க கூட்டு பிரார்த்தனைக்கு மக்களை 
மதகுருமார்கள் அழைத்தனர்,
அதன் மூலம் நோய் இன்னும் தீவிரமாக பரவி மக்கள் கொத்து கொத்தாக மடிந்து போன சோக வரலாறும் உண்டு. இப்பொழுது இந்த நோயை பற்றிய பூரண அறிவும், குணப்படுத்த கூடிய என்டிபயாடிக் மருந்தும் நம்மிடம் 
இருக்கிறது, இருந்தாலும் இதுவும் 
ஒரு கொள்ளை நோய் இலகுவாக பரவக்கூடியது. சரியான நேரத்தில் 
தகுந்த சிகிக்சை கிடைக்காவிட்டால் 
சாவு நிச்சயம்.  

பெரிய சைஸ் அணில் போன்றிருக்கும் மர்மோட்டின் எனப்படும் ஒருவகை விலங்கின் இறைச்சியை பச்சையாக உண்பதால் இந்த நோய் மீண்டும்  பரவியுள்ளதாக சொல்கின்றார்கள்.
சீனர்கள் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் கண்டது கடியதை தின்று புதிது புதிதாக நோயை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது உணவு விஷயத்தில் 
எதாவது கடுமையான சட்டத்தை 
சீனா கொண்டுவந்தால் எதிர்காலத்தில் புதிதாக எதாவது நோய் தொற்று வராமல் தடுக்க முடியும். சீனா இந்த புபோனிக் 
பிளேக் பரவாமல் தடுக்க தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கபோகிறதென்று.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I