Rome

2005 / series / drama No Spoilers நாம் ரோமின் வரலாற்றை முழுமையாக படித்திருக்காவிட்டாலும். சீஸர், கிளியோபாட்ரா, மார்க் ஆண்டனி போன்ற பெயர்களும். கிளாடியேற்றர்ஸ், ஏரினா, செனட், போன்ற வார்த்தைகளும் நமக்கு பரீட்சயமானவை. சிறுவயது முதல் எதோ ஒருவகையில் இவை நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. "All roads lead to rome" என்ற பிரபலமான சொல்லாடல் கூட அப்படிபட்ட ஒன்றுதான். ரோம் இரண்டு சீசன், 22 எபிசொட்களை கொண்ட தொடராகும். ஒவ்வொரு எபிசொட்டும் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது. சுருக்கமாக ரொம் இராச்சியத்தின் வரலாற்றை சிறப்பாக படைத்துள்ளார்கள். கி.மு 52 ஆண்டிற்கு நம்மை அழைத்து சென்று, மத்தியகால ரோமில் வாழ்ந்த நகரவாசிகளின் அரசியல், கலாசாரம், வாழ்வினை கண்முன்னே காட்டி நமக்கும் காலப்பயணம் செய்த உணர்வினை ஏற்படுத்திவிடுகிறது. கி.மு 52 பிறகு ஜூலியஸ் சீஸரின் எழுச்சியும், அவர் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் வீழ்ச்சிக்கு பின்னார் ஆட்சியிலும் அரசியலிலும் நிகழும் திடிர் மாற்றங்களும், குழப்பங்களும் தான் கதைகளம். மொத்தமும் புனைவு ...