மஜ்னூன் குறுங்கதைகள்

நண்பர்களுக்கு வணக்கம்! இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள், கிண்டிலில் "மஜ்னூன்" என்னும் என் குறுங்கதை புத்தகத்தை வெளியிட்டு உள்ளேன். இது என் முதல் புத்தகம். கிட்டத்தட்ட ஒரு வருடக் கால இடைவெளியில் நான் எழுதிய குறுங்கதைகளை இதில் தொகுத்துள்ளேன். வெறும் கிண்டில் புத்தகம் தானே என்று எண்ணி ஒப்பேற்றாமல் அட்டைப்படம் தொடங்கி உள்ளடக்கம் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியாக வடிவமைத்துள்ளேன். எதைச் செய்தாலும் முழுமையாக குறைகள் இன்றி நிறைவாக செய்வது என் பழக்கம். புத்தகம் என்று வரும் பொழுது ஒரு படி மேலேயே! மஜ்னூனை படித்து முடிந்தவுடன் அதில் ஏதோ ஒரு படைப்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். "Pleasure of Text" என்று சொல்வார்களே அந்த இன்பத்தை என்னால் உங்களுக்குத் தரமுடியும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். ஒர் எழுத்தாளனாக இதை விட வேறு சிறப்பான ஒன்றை வாசகனுக்கு கொடுக்க முடியாது. பரந்துபட்ட வாசிப்பு பழக்கம், எனக்கு இந்நூலை மனதிருப்தியுடன் எழுதி முடிப்பதில் உதவியது. என் ரசனை கலவையானது. அராத்துவையும் வாசிப்பேன், தல்ஸ்தோயையும் வாசிப்பேன். இருவரின் எழுத்தையும் என்னா...