Posts

Showing posts with the label Dia (தியா) / 2020 கன்னடம்

Dia (தியா) / 2020

Image
கன்னடம் / 2020 தொடர்ச்சியாக இந்த படம் தொடர்பான  சில பதிவுகளை பார்க்க முடிந்தது.  அதில் சிலர் "ரொம்ப பீல் பண்ண வச்சிடுச்சினு" எல்லாம் பதிவிட்டிருந்தாங்க. படம் கைவசம் இருந்தும். அழுவாச்சி படம் என்பதாலேயே பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தேன். சில படங்கள் நிஜமாவே தூக்கத்தை கெடுத்துவிடும். எனக்கு அந்த மனநிலையில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. ஆனால் இப்படியே இருந்தால் அருமையான படங்களை எல்லா பார்க்கவே முடியாது. அதனால் நேற்று ஒருவாறு பார்த்துவிட்டேன். காதல் அழகான உணர்வு. அப்பொழுது எம் மனதில் நிகழும் ரசவாதத்தில்  சொர்க்கத்திற்கும் மேலான இன்பமயமான உலகில் சஞ்சரித்து கொண்டிருப்போம். இவையெல்லாம் சரியா போகும் மட்டும்தான். எதோ ஒரு காரணத்தால் அது உடையும் பொழுது  வாழ்கையே புரட்டிப் போற்றுவிடும். அதுவரை சொர்க்கமா தெரிந்த உலகம்  ஒரு நொடியில் நரகமாகிடும். அதிலிருந்து மீண்டு வருபவர்கள் ஒரு சிலரே.  சிலர் வாழ்கையே முடித்துக்கொள்வார்கள்.  வாழ்வை மிக பக்குவமாக அணுகுபவர்கள் கூட சுக்குநூறாக உடைந்து போய்விடுவார்கள். எப்பேர்ப்பட்டவனையும் கிறுக்கனாக்க...