Arctic (2019)

No Spoilers அது என்னமோ தெரியல சர்வைவல் படங்களின் மீது எனக்கு தீராக்காதல் ! கிட்டதட்ட Imdb ல நல்ல ரேட்டிங் உள்ள சர்வைவல் படம் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இப்போ புதுசா ஒன்னு வந்தாலும் விடுறது இல்லை. ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி ரேட்டிங் பார்த்து படம் பாக்குற பழக்கம் எல்லாம் கிடையாது. இல்லை அப்பிடி ஒன்னு இருக்கதே தெரியாதுனு சொல்லலாம். அந்த நேரத்துல நல்ல உலக சினிமா ரசனையுள்ள ஒரு மலையாளி நண்பன் இருந்தான். (பின் நாட்களில் அவன் மூலமாகதான் Imdb அறிமுகம் கிடைச்சுது) அவன்கிட்ட நல்ல சர்வைவல் படமா சொல்லுடானு கேட்டேன் "அடர்ந்த காட்டுல மாட்டிகிட்டு சாப்பாடு, தண்ணி இல்லாம இயற்கையோட போராடி தப்பி பிழைச்சு வார மாதிரி இருக்கனும்னு விவரணையா சொன்னேன்" சிரிச்சுகிட்டே "அந்த அளவுக்கு ஒருத்தன் கஷ்டப்படுறத பார்க்கும் அளவுக்கு உனக்கு ஏன்டா இப்படி ஒரு கொலவெறினு விளையாட்ட கேட்டான் !" ஒரு நிமிஷம் இந்த மாதிரி படம் பாக்குறதுக்கு இப்பிடியும் ஒரு காரணம் இருக்குமானு யோசிச்சு பார்த்தேன். எனக்கு அப்பிடி தோணல, மாறாக எனக்கு தன்னம்பிக்கையை தந்துச்சி. கடைசி மூச்சு வரை போராடனும், ...