Photograph (2019)



No Spoilers
இந்த படத்தை பார்க்கும் பொழுது 
ஏக்கத்துடன் கவிதை படிக்கும் உணர்வு. அதில் சோகமுமில்லை, இன்பமுமில்லை. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்ட ஒரு சாமானிய விளிம்பு நிலை மனிதனை பார்க்கலாம். தன் நிலை குறித்து யாரையும் குறை சொல்லவில்லை, பெரிதாக வருத்தப்பட்டவனாகும் தெரியவில்லை.

பொருளாதார சுமைக்கு மத்தியில் திருமண வாழ்க்கை வாழும் ஆசை இருந்தாலும் இதுவும் சேர்ந்து வாழ்கை மேலும் சிக்கலாகி போய்விடக்கூடாது என்ற பயம் அவனை சூழ்ந்து இருந்தது. பணப்பிரச்சனையும் அது சார்ந்த பொறுப்புகளையும் முடித்து விட்டு பிறகு பார்த்து கொள்ளலாம் என வாழும் நாயகன் ! வசதிவாய்ப்பு இருந்தும் எதிலும் பிடிப்பு அற்று படிப்பு, வீடு, தூக்கம் இதுவே தினசரி வாழ்க்கை என வாழும் நாயகி, சக வயது யுவதிகளிடம் இருக்கும் விடலை பருவத்திற்கே உண்டான குறும்போ, குதூகலமோ எதுவுமில்லை. முற்றும் துறந்த முனியின் சாந்தம் படர்ந்த முகம் அவளுக்கு !

50, 30 ரூபாய்க்கு புகைப்படம் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்ட
தெரு புகைப்படக்கலைஞன். அந்த தெருவில் தான் அவளை, அவன் காண்கிறான். "மேடம் ஒரு போட்டோ எடுத்துகிருங்க" இது தான் அவர்களின் முதல் சம்பாஷணை. எதிர்ப்பாரா சந்திப்பு, காலத்தின் போக்கில் நட்பாய் மாற. அவன் அருகில் இருக்கும் பொழுதுகளில் தன்நிறைவு பெறுவதையும் அவன் எடுக்கும் புகைப்படங்களில் தான் அழகாவும், மகிழ்ச்சியாகும் இருப்பதை உணர்கின்றாள். அவளை இதற்கு முன்பு அவளே இந்த அளவுக்கு ரசித்தது இல்லை !

இருவருக்கும் இடையில் காதலில்லை, காமமும்மில்லை, நட்பை தாண்டிய பிரியம், நாளடைவில் எதுவாகவும் மாறக்கூடும்,.!
இவளை போன்ற பெண்னோருத்தி வாழ்கை துணையாய் வருவது கனவில் கூட சாத்தியம்மில்லை என்பது அவனுக்கு நன்றாக தெரியும். வயது, அந்தஸ்து, அழகு இப்படி எந்த அளவுகோல் வைத்து பார்த்தாலும் எட்டாத உயரம் தான் ! ஆனால் இருவரின் மனங்ளும் இவை குறித்து அலட்டி கொண்டதாக தெரியவில்லை. நாற்பட...., நாற்பட...., நெருங்கி வருகின்றன.

மிகுதியை நான் சொல்ல மாட்டேன், முடிவை திரையில் நீங்களே காணுங்கள்.
Lunch box படத்தில் டிபன் வலாக்கள் மாதிரி. Photograph இல் தெருபுகைப்படக்கலைஞர்கள். வித்தியாசமான வாழ்வாதாரத்தை கொண்ட கதைமாந்தர்கள். மிகை படுத்தாத நிதர்சனமான கதைகள் இது தான் இயக்குனரின் (Ritesh Batra) கைவண்ணம் ! மனிதர் உலகை காணும் பார்வையே தனித்துவமாகதான் இருக்கின்றது.
படத்தின் Color Tone மும் ஒவ்வொரு fram மும் தனி அழகு, பின்னணி இசையாக இயற்கையான சத்தங்கள் அதிகமா பயன்படுத்தப்பட்டு இருப்பது படத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது. எந்த கதாபாத்திரமும் தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாயகியின் முகம் மட்டும் நிறைய பேசுகின்றது தேவையான அளவுக்கு அர்த்தப்படுத்தி கொள்வது மட்டும் நம்வேலை !

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I