நோய்கிருமிகளுக்கு எதிரான யுத்தம்

நாடுகள் எல்லைகளை மூடுவதும், நகரங்களை முடக்குவதும். சமூகங்கள், தனிநபர்கள் குவாரண்டைன் நிலைக்கு உட்படுத்தபடுவதும். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவலை தடுப்பதற்கு குறுகிய காலத்தில் பயனளிக்கலாம் ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தொடர்ந்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையா பாதிக்கப்படும். உலகமயமாக்களின் பின்பு ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டின் பொருளாதாரதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கபட்டுள்ளது. உலக நாடுகளை விடுங்கள் நாம் வாழும் நகரங்களையும், கிராமங்களிலும் இன்றைய நிலைமையை கவனித்து பாருங்கள். முதற்கட்டமாக தினக்கூலிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஒரு வேலை சாப்பாட்டிற்கே பேரும் திண்டாட்டமாய் போகும். மிடில் கிளாஸ் மக்களிடத்தில் பணமிருந்தாலும் பொருட்களும், சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அங்கும் சிக்கலான நிலைமைதான். செல்வந்தர்கள் சில மாதங்கள் தாக்கு பிடிப்பார்கள். பிறகு அவர்களின் பாடும் திண்டாட்டம்தான். வரலாற்றில் உலகமயமாக்கலுக்கு முன்பு, 14ம் நூற்றாண்டில் கொள்ளை நோயான பிளாக் டெத் (Black death) மூலம், ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவிலும், கிழ...