T-வைரஸ் vs கோவிட்-19


Resident evil என்றொரு பிரபலமான அறிவியல் பாண்டஸி வகையை சார்ந்த ஹாலிவுட் திரைப்படதை பார்த்து உள்ளீர்களா ? அதில் அம்ரெல்லா கார்பொரேஷன் என்னும் நிறுவனம் T-வைரஸ் என்னும் படுஆபத்தான 
உயிரியல் ஆயுதத்தை இரகசியமாக உருவாக்கும். ஒரு விபத்தில் அந்த வைரஸ் அடங்கிய பரிசோதனை குழாய் கீழே விழுந்து வெடித்து சிதற T-வைரஸ் பரவஆரம்பித்து ஒரு கட்டத்தில் கட்டுப்பாடின்றி அந்த நிறுவனம் அமைந்திருந்த ரக்கூன் நகரம் முழுவதும் பரவதொடங்கிவிடும்.

T-வைரஸால் பாதிக்கபட்ட மனிதர்கள், விலங்குகள் என எல்லோரும் 
ஸோம்பியாக உருமாறி மனிதர்களை கடித்து இரத்ததை உறிஞ்சு குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடிப்படும் அனைவருக்கும் அந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் பிறகு அவர்களும் ஸோம்பிதான். அம்ரெல்லா நிறுவனம் தங்கள் தவறு உலகத்துக்கு தெரியக் கூடாதென்று  அந்த நகரத்தை தனிமைப்படுத்தி கூண்டோடு எல்லோரையும் அழித்து விடமுயற்சிப்பார்கள். இப்படி கதை பாகம் ஆறு வரைக்கும் நீண்டு போகும். நல்ல சுவாரசியமான திரைப்படதொடர்.

கிட்டத்தட்ட அதற்கு ஒப்பான சம்பவங்கள் தான் இப்பொழுது உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன ஒரு குறை? ஸோம்பியா யாரும் மாறவில்லை. முதலில் நாட்டில் உள்ள நகரகங்கள் தனிமை படுத்தப்பட்டன, இப்பொழுது  நாடுகள் தனிமை படுத்தபடுகிறது. தடுப்பு மருந்தும் இல்லாத 
காரணத்தினால் நோயின் பரவலை தடுக்க இதுவொன்றே வழி. 

சீனாவின் வுஹான் என்னும் இடத்திலிருந்து கொவிட்-19 வைரஸ் பரவ ஆரம்பித்த பிறகு, விலங்கு பண்ணையில் இருந்துதான் மனிதருக்கு பரவியதாக சீன அரசாங்கம் கூறியது. இஸ்ரேல் உளவுத்துறை இது சீனாவில் இரகசியமா தயாரிக்கபட்ட உயிரியல் ஆயுதம் இடம் மாற்றும் போது ஏற்பட்ட கவனயீனத்தால் பரவதொடங்கிவிட்டது என்றொரு குண்டை தூக்கிபோட்டது.
பிறகு கற்பனை கதையை பரப்ப வேண்டாம் என்று சீனா கறாராக மறுத்து விட்டது. யாருக்கு தெரியும் ஒருவேளை இஸ்ரேல் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். அப்படி இருக்கு பட்சத்தில் சீனாவிடம் 
கைவசம் இதற்கு மாற்று மருந்தும் நிச்சயமாகயிருக்கும். சீனா அதை சொன்னால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று தவிர்க்க கூடும். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கதை எங்கு சென்று முடிவடைய போகுதென்று.

சில நேரம் மனித குலத்திற்கே இப்படி பொதுவான எதிரி வருவதும் நல்லதுதான். அப்பொழுதுதான் ஜாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன், எல்லாம் கடந்து ஹோமோ செப்பியனாக ஒற்றுமையாக யோசிப்பான். 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I