ஆயிரம் காலத்து பயிர்

சக வெளிநாட்டு நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி நீ மேரேஜ் பண்ணிட்டியா? நான் இல்லன்னு பதில் சொன்னதும். ஏன் உங்க நாட்டுகாரங்க பொதுவா லேட் ஏஜ்ல மேரேஜ் பண்ணுறீங்கனு? அடுத்த கேள்வி. நேபாளம், இந்தியா போன்ற நாட்டவர்கள் முப்பது வயது வரை காத்திருப்பது இல்லை. பொதுவா நாம அப்போதான் திருமண வாழ்கைக்கு தயாராகுறோம். அந்த சமயத்தில் கூட பொருளாதார ரீதியாக இஸ்திரமான நிலையிருக்காது. திருமண வயதை தீர்மானிப்பதில் பணத்திற்கும் முக்கியப்பங்குண்டு. மலைபோல் உயர்ந்து நிற்கும் வாழ்கை சிலவுகளுக்கு மத்தியில் சுமுகமாக திருமணத்தை நடத்தி முடிக்க பலவருட உழைப்பும், சரியான திட்டமிடலும் தேவை எடுத்தோம், கவுத்தோமுனு பண்ணுற காரியாமில்லை. இதை வெளிநாட்டு தோழர்களுக்கு புரியவைப்பது கடினம். கவுண்டமணி சொல்லுறமாதிரி "நானாடா மாட்டேன்றேனு" மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்துருவேன். யோசிச்சு பாருங்க கொஞ்சம் சுமாரா திருமணத்தை நடத்த குறைந்தது பத்து லட்சம் ரூபா சரி வேணும். பணக்காரங்களுக்கு இது பிரச்சனையே இல்லை. வறுமைக்கோட்டுக்க...