செட்டில் ஆன மாப்பிள்ளை


பசங்க பொதுவா பொண்ணுங்க மேல வைக்கும் குற்றச்சாட்டு ஒன்னு இருக்கு. பொண்ணுங்க மனச பார்த்து காதலிப்பாளுங்க, ஆனால் லைஃப்ல செட்டில் ஆனவன்னா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிருவாளுங்கனு. ஓரளவுக்கு உண்மைதான். காதலிக்கும் போது மனச பார்ப்பாங்க. இவன் தான் வாழ்கைதுணைனு முடிவு பண்ணிட்டா வசதியா இருக்கானா, நல்லா சம்பாதிக்கிறானானு? எல்லாம் பார்த்து தான் முடிவு பண்ணுவாங்க. 

இதுக்கு பொண்ணுகளை தப்பு சொல்ல முடியாது. அவங்கே டிசைன்னே அப்படி. தன்னோட துணைய எந்த அடிப்படையில தேடனுமுனு அவங்க DNA யிலேயே ப்ரோக்ராம் பண்ணிருக்கு. அதை தாண்டி யோசிக்குறது இலகுவான காரியமில்லை. கிறுக்கு பய மாதிரி உளறுறேன்னு யோசிக்கிறீங்கலா? கீழ படிச்சிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.

வைல்ட் லைப் (wildlife) ஆவணப்படங்கள் பார்த்தாலே போதும் கீதை படிச்ச மாதிரி உலக நியதியை பற்றிய புரிதல் வந்து வாழ்கையை எப்படி அணுகவேண்டும் என்ற ஞானம் கிடைச்சிடும். சரி விஷயத்துக்கு வாரேன்.

சம்பவம் 1
காட்டுல இருக்கும் ஒரு மான் கூட்டத்துல இரண்டு இளம் ஆண் மான்கள் ரெண்டு பயங்கரமா முட்டி, மோதி சண்டை போடுது. ரொம்ப ஆக்ரோஷமா! அந்த பக்கமாவரும் சிங்கத்தை கூட கண்டுக்காம மற்ற நாட்களில் பின்னம் கால் பிடிறில அடிக்க ஓடும் இன்று சிங்கமாச்சு மயிராச்சுனு மூர்க்கதனமான சண்டை. சில நேரங்களில் மணிக்கணக்கில் தொடரும் இந்த யுத்தம் ஒன்றை ஒன்று கொல்லும் வரை ஓயாது. இத்தனை அக்கப்போரும் எதுக்கு தெரியுமா? அந்த கூட்டத்துல இருக்க ஒரு பெண் மானை அடையுறதுக்கு தான். இந்த ரெண்டும் அடிச்சுகிட்டுயிருக்கும் போது அந்த பெண் மான் ஜாலியா எதையும் கண்டுக்காம புல்லு சாப்பிடுகிட்டுயிருக்கு. சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கடான்ற மாதிரி.

சம்பவம் 2
மழைகாட்டுல ஒரு வகையான ஆண் பறவை ஒரு இடத்தை தன் அலகினால் சுத்தம் செய்து, சின்ன அழகான, விதமான நிறங்களில் பூவெல்லாம் பறிச்சுட்டு வந்து அழகு படுத்திட்டுயிருக்கு. அதே நேரம் பக்கத்துல வேறு ஒரு இடத்துல இன்னோரு ஆண் பறவையும் இதே வேலைய பண்ணிட்டுயிருக்கு. கொஞ்ச நேரத்துல ஒரு பெண் பறவை அந்த இடத்துக்கு வந்த பிறகு. ஆண் பறவைக ரெண்டும் மிக இனிமையா ஓசை எழுப்பி, பஞ்சவர்ண நிறத்தில் இருக்க அதன் இறக்கைகளை விரிச்சு ஒரு குட்டி டான்ஸ் வேற. பார்க்கவே கண்கொள்ளாகாட்சி! இதுவெல்லாம் எதுக்கு தெரியுமா? அந்த பெண் பறவையை இம்ப்ரெஸ் பண்ணத்தான். பிறகு அந்த பெண் பறவை ரெண்டு பேரோட டான்ஸ், பாட்டு கச்சேரி, மலர் அலங்காரமெல்லாம் பார்த்து தனக்கு பிடிச்ச ஒரு பறவையை துணையாக தெரிவு செய்து.

சம்பவம் 3
கடலுக்கு அடியில் ஒரு மீன்வகை ரொம்ப நேரம் எடுத்து பொறுமையா வாயில மண்னை அள்ளியும், மண்டையால தள்ளியும். அந்த மண்ணுல எதோ கோலம் மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணி. அங்கேயிருக்க ஒரு பெண் மீனை கவரமுயற்சி பண்ணிட்டு இருக்கு.

சம்பவம் 4
இப்போ நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கும் அதிர்ச்சியாயிருக்கலாம் முதல் எனக்கே அப்படி தான் இருந்துச்சி. ரெண்டு பாம்பு பின்னி பிணைந்து மணிக்கணக்குல கட்டி புரளுறத பார்த்து இருப்பிங்க. சில நேரம் அத பார்த்து நீங்களும் என்ன மாதிரி பொறாமை பட்டுக்கூட இருக்கலாம். பாம்பு கூட ஜாலியாயிருக்கு நாம காஞ்சு போய்ட்டுயிருக்கமேனு. மற்றைய சமயங்களில் மனித வாசனை உணர்ந்தாலே ஓடி மறைந்து விடும் பாம்பு இந்த சமயங்களில் பக்கத்துல போனால் கூட கண்டுக்கவே செய்யாது. அந்த ரெண்டு பாம்பும் கலவியில் (sex) இருக்குனு தானே நினைச்சுட்டு இருக்கீங்க? தப்பு அது ரெண்டுமே ஆண் பாம்பு. அதுக கட்டி புரண்டு பலப்பரீட்சை நடத்துங்க. அதை புதரில் மறைவுல இருந்து வேடிக்கை பார்த்துட்டு ஒரு பெண் பாம்பு காத்திருக்கும். சண்டையில ஜெயிக்கிறது கூட துணை சேர. அதிர்ச்சியா இருக்குல்ல !?

சரி இதையெல்லாம் விட்டுருவோம்.
நம்ம கண்கூடா பார்க்கும் ஒரு சம்பவம். தெருநாய்கள் ஜோடி சேருவதை யோசிச்சு பாருங்க. மார்கழி மாசத்துல அதுக படும் கஷ்டத்தை எப்படி சொல்லுறது. சக நாய்கள் கிட்ட கடிவாங்கி, மனுசனுககிட்ட அடிப்பட்டு. இரவு பகலா சாப்பாடு, தண்ணியில்லாம அந்த பெண் நாய் பின்னுக்கு அலைந்து ஊரையே சுற்றி வந்து. ஜோடி சேருவதற்கு அதுப்படும்பாடு இருக்கே நரக வாழ்கை!

மேல சொன்ன சம்பவங்களுக்கும் பொண்ணுங்க செட்டில்லான மாப்பிளை கேக்குறதுக்கும் என்ன தொடர்புன்னு தானே கேக்குறீங்க? இயற்கையில் எந்த பெண் உயிரினமும் சாதாரணமா தன் துணையை தெரிவு செய்வது கிடையாது. அதன் படைப்பிலேயே சில கோட்பாடுகளும் அடிப்படை விதிகளும் உண்டு. நமக்கு தான் நாம மனுஷங்க இயற்கைக்கு நாமும் ஒரு விலங்கு அவ்வளவு தான். எந்த ஒரு உயிரியும் நிலைத்து இருத்தலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். தன் இனம் அழியாமல் இருக்க வளமான எச்சங்களை உருவாக்கவேண்டியதுதான் தலையாய கடமை. ம்ம்ம், இல்லை கட்டளை. நொஞ்சானாக இருந்தால் சர்வைவல் பண்ண முடியாது.

"தக்கன பிழைக்கும், தகாதன மடியும்" 
இதுதான் இயற்கையின் நியதி.

மனிதனை தவிர்த்து மற்ற உயிர்களை பொறுத்தவரை பெண் தன் ஆண் துணையை தீர்மானிக்க பலம், அறிவு கூர்மை தகுதிகளாக கருதப்படுகின்றது. நாமும் குகை மனிதனாக வாழ்ந்த கற்காலத்தில் பெண்ணை அடைய பலம் தான் முதல் தகுதி. ஒரு பொண்ண பிடிச்சு இருந்தா அவளை வச்சிருக்கவன் தலையில ஒரே போடா போட்டுட்டு.
அந்த பொண்ண அலகா தூங்கிட்டு வந்துரலாம். அதற்கு பலசாலிய
இருக்கனும். மேல சொன்ன மான், பாம்பு கதை மாதிரிதான். எப்போழுது நாகரிகம் அடைந்த சமூகமாக மாறி, சட்டம் ஒழுங்கு எல்லாம் வந்த பிறகு உடல் பலத்தை விட அறிவும், பணமும் ஒரு பெண்ணை அடைவதற்கு தகுதிகளாக மாறியது. அறிவும், பணமும் மட்டும் போதுமா குணம் வேணாமான்னு நீங்கள் கேட்கலாம். நல்ல மனம் இருக்கவன் கிட்ட அறிவும், செல்வமும் இருக்காதா என்ன? ஒரு பொண்ணு தன்ன கட்டிக்க போறவன் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் கடைசிவரை
பாதுகாப்பான வாழ்கையை கொடுக்க முடியுமான்னு யோசிக்கும் போது.
நல்லவனா மட்டும் இருந்தா போதாது, வசதியானவனாவும், புத்திசாலியாவும் இருக்கனும் என்று எதிர்பார்க்குறா.

இந்த புரிதல் எனக்கு வந்த பிறகு.
எட்டு வருசத்துக்கு முன்னுக்கு நா ஒரு பொண்ண காதலிச்சு பல்ப் வாங்கிட்டு 
Don't Trust Girls" னு ஒரு பதிவு இட்டேன். இப்போ அதை நினைத்தால் சிரிப்பா வருது!

நரேஷ் 06-27-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I