பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் The Richest Man in Babylon நீண்ட நாட்களாக மனதில் கேட்கப்பட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு தெளிவான பதிலை தந்த புத்தகமிது. பொதுவாக நான் வாசிக்கும் எல்லா நூல்களை பற்றியும் சிறுகுறிப்பு எழுதவேண்டுமென்று நினைப்பேன். பிறகு நேரப்பற்றாக்குறை காரணமாக எழுத முடிவதில்லை. (கொஞ்சம் சோம்பேறித்தனமும்) ஆனால் இதை பற்றி எழுதியே ஆகவேண்டும். நிதி நிர்வாகம் பற்றிய அடிப்படை அறிவை பெறுவதற்கு எளிய மொழியில் புனையப்பட்ட மிக சிறப்பான நூல். பணத்தை எப்படி சிறப்பாக நிர்வாகம் செய்வது? எவ்வாறு லாபமிட்டும் முறையில் முதலீடுவது? என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இன்றைய உலகில் யூ டுயூப் சேனல்கள், புத்தகங்கள், இணையதளங்கள் என ஆயிரம் வழிகள் உண்டு. அவை அனைத்தும் லட்சங்களை மில்லியனாக மாற்றுவது எப்படியென்று கற்றுத்தரும். ஆனால் இங்கு நம் நிலைமையோ வேறு, சில ஆயிரங்களே மாதவருவாய். வரவும் சிலவும் சமமாகயிருக்கும். இதில் எப்படி சேமிப்பது? பிறகு எப்படி முதலீடு செய்வது? எந்த காலத்தில் செல்வந்தன் ஆவது? இவை எல்லாவற்றுக்கும் தெளிவான ...