தேகம்



தேகம்

இந்த நாவலை பற்றி எங்கு ஆரம்பித்து எப்படி எழுதுறதுனு தெரியல!? முதலே சொல்லிடுறேன் என் பதிவு முழுமையாக நூலின் சாரத்தை உள்ளடக்கி இருக்காது. இது மற்றைய சமகால தமிழ்  எழுத்தாளர்களின் தோரணையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணம். பொதுவாக நீங்கள் வாசித்து பழகிய நாவலுக்கு உண்டான வடிவத்தை இதில் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். ஆரம்பம் முடிவு பற்றியெல்லாம் ஆராயாமல் வாசித்தால் கதை சுவைப்படலாம்!

நீங்கள் இது வரை சாருவை படித்து இல்லையென்றால், தயவுசெய்து இந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டாம். "தேகம்" நல்ல ஆரம்பமாகயிருக்காது. இதன் செறிவு அதிகம் சில இடங்களில் ரொம்ப பச்சையாயிருக்கும்.

எங்கே உன் கடவுள்
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
கோணல் பக்கங்கள்
கடவுளும் சாத்தானும்

(இன்னும் கொஞ்சம் இருக்கு உடனே  நினைவில் வருதுயில்லை!)

போன்ற புத்தகங்களை வாசித்து உங்களை தயார்படுத்தி கொண்டு  இதுக்கு வாங்க இல்லாவிட்டால் ஓவர் லோடு ஆகவாய்ப்புகள் அதிகம். சாருட தீவிர ரசிகனான எனக்கே நாவலின் சில இடங்களில் முகம் அஷ்ட கோணலாக மாறிடுச்சு!

நான் இன்னும் முழுசா சாருவை படிச்சு முடிக்கல, இது வரை நான் படித்த நாவல்களில் அவர் தொடாத உடலின் மீதான வன்முறையை பற்றி ரொம்ப ஆழமா இதுல எழுதி இருக்காரு. தர்மா தான் கதையின் நாயகன் இவன் நாயகனா? வில்லனானே சந்தேகமா இருக்கு!? மலம் அள்ளும் தாழ்த்தபட்ட சமூகத்தில் பிறந்து வளர்த்தவன். நைனா மாதிரி மனுஷ பீயை அள்ளுறது பிடிக்காம தனக்கான அடையாளத்தை தேடி வீட்டை விட்டு வெளியே வந்துடுறான். பின்னாட்கள் ரொம்ப கஷ்டத்துல போகுது. பசியில் வாடி சாகாத குறையா பிழைப்புக்காக பிற்பாக்கெட், கஞ்சா, அபின் கடத்துறது போன்ற சமூகவிரோத குற்றங்களில் ஈடுபட்டு பின்னே ரவுடியோட கூட்டு சேர்ந்து சித்ரவதை  பண்ணுறவனாமாறுறது. காமத்தீயில் வெந்து போய்ட்டு அவஸ்த்தைபடுறது. இத்தனைக்கு நடுவுல தர்மா எழுத்தாளன் வேறு  இதுல சாரு தான் தர்மா, ஆனால் தர்மா பண்ணுற சம்பவங்கள் எல்லாம் உண்மையாவை அல்ல, அதே நேரம் உண்மையான நிகழ்வுகளும் உண்டு.
இதில் எது நிஜம்? எது புனைவு? என்பதை சரியாக வேறுபடுத்தி  புரிந்துகொள்ள வேண்டியது நம்ம கையில இருக்கு.

சில இடங்களில் சிரிப்புவரும், பிறகு ஆர்கஸ நிலையில் இருப்போம். அப்படியே குமட்டிட்டுவரும், பிறகு காதல் ரசம் சொட்டும். பின்பு கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு டார்ச்சர் என்னும் பெயரில் உச்சக்கட்ட வன்முறை நிகழும். இடையில ரெண்டு கெட்ட வார்த்தை, பிறகு ஜென் தத்துவம். கொஞ்சம் அரசியல். நிறைய இலக்கியம். கூடவே ஆங்கில அகராதியையும் பக்கத்துல வச்சிக்கிருங்க நிறைய புரியாத ஆங்கில வார்த்தைகளும் அங்கங்கே தலைகாட்டும் போது உதவியாகயிருக்கும்.

முன்னெச்சரிக்கை: கெட்ட வார்த்தை, செக்ஸ் பற்றி ரொம்ப வெளிப்படையாக பேசியிருக்காரு, முதலே சொல்லிட்டேன். பிறகு வாசிச்சிட்டு என்னை குறை சொல்ல கூடாது.

வழமைபோலவே புதிய தேடலுக்கான தொடக்கமாக அங்கங்கே நீட்சிகள்  தேகத்தில் உண்டு. குறிப்பெடுத்து  வைத்துகொள்ளுங்கள்.

© நரேஷ் 09-04-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I