Posts

Showing posts from January 2, 2020

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

Image
சிறுகதைகள் / போகன் சங்கர்  நான் முழுமையாக வாசித்து முடித்த சிறுகதை தொகுப்பு. அருமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நண்பர் Govinda Raj க்கு நன்றி! எவராவது சொன்னால் தான் சில நல்ல படைப்புகளை கண்டடைய முடிகின்றது. நம்மை பாதித்துவிட்ட படைப்பை பற்றி எதுவும் பேசாமலிருப்பது மாகாபாவமென  உணருகிறேன். முதலில் இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் எதோ புராணக் கட்டுரை தொகுப்பாகயிருக்க கூடுமென நினைத்து கொண்டேன். இந்த கணம் வரை உங்களில் பலருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். இது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். போகன் சங்கர் தன்னை பாதித்த ஜெ மோவிற்கு நன்றி சொல்லித்தான் கதைகளை சொல்லத் துவங்குகிறார்.  " பூ ",  " படுதா ",   " யாமினி அம்மா ", " நடிகன் "  போன்ற கதைகளில் அவரின் தாக்கத்தை உணரமுடிந்தது.  போகனுக்கு நன்றாக கதை சொல்ல வருகின்றது. எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் கதை பிறகு கதைக்குள் இன்னோரு கதை. பிறகு இரண்டும் சந்திக்கும் தளம். அபாரம்! சிறந்த வாசிப்பனுபவம். இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிறுகதை எழுதும் ஆசையே போய்விடுகிறது. இன்னும்