The Mountain Between Us (2017)

Genre: Action, Adventure, Drama Imdb 6.4/10 No Spoilers படத்தின் கதையை முழுதாகச் சொல்லி பார்க்கும் சுவாரசியத்தை குறைக்க மாட்டேன். அதனால் பயமில்லாமல் முழுதாக வாசிக்கலாம். நான் ஒரு Survival Movie பைத்தியம் இந்த படத்தை பார்க்க தேர்வு செய்தமைக்கும் அதுவே காரணம். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி அழகான காதல் கதையும் கூட படத்தின் தலைப்பே கதையின் கருவென்றும் சொல்லலாம். The Mountain Between Us "நாம் இணைச் சேர கடுகளவு சாத்தியங்களும், மலை அளவு ஆசாத்தியங்களும் " முன் பின் அறிமுகமில்லாத ஓர் ஆணும் பெண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணமாக தனியார் விமானம் ஒன்றில் இணைந்து பயணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் மோசமான வானிலைக் காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி பனிமலைகளுக்கு நடுவே விழுந்து விடுகிறது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் எல்லாம் முழுமையா அற்று நிர்கதிக்கு உள்ளாகும் தருணத்தில், இருவரும் எல்லாத் தேவைகளுக்கும் அறியாத ஒருவரை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. கைவசம் இருக்கும் உணவும், நீரும் சொற்பம். வாழ்வாதாரங்களும் எதுவும் இல...