The Mountain Between Us (2017)


Genre: Action, Adventure, Drama
Imdb 6.4/10

No Spoilers 
படத்தின் கதையை முழுதாகச்  சொல்லி பார்க்கும் சுவாரசியத்தை குறைக்க மாட்டேன். அதனால் பயமில்லாமல் முழுதாக வாசிக்கலாம்.

நான் ஒரு Survival Movie பைத்தியம் இந்த படத்தை பார்க்க தேர்வு செய்தமைக்கும் அதுவே காரணம். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி அழகான காதல் கதையும் கூட

படத்தின் தலைப்பே கதையின் கருவென்றும் சொல்லலாம்.
 The Mountain Between Us
"நாம் இணைச் சேர கடுகளவு சாத்தியங்களும், மலை அளவு  ஆசாத்தியங்களும் "  

முன் பின் அறிமுகமில்லாத ஓர்  ஆணும் பெண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணமாக 
தனியார் விமானம் ஒன்றில் இணைந்து பயணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் மோசமான வானிலைக் காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி பனிமலைகளுக்கு நடுவே விழுந்து விடுகிறது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் எல்லாம் முழுமையா அற்று நிர்கதிக்கு உள்ளாகும் தருணத்தில், இருவரும் எல்லாத் தேவைகளுக்கும் அறியாத ஒருவரை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. கைவசம் இருக்கும் உணவும், நீரும் சொற்பம். வாழ்வாதாரங்களும் எதுவும் இல்லை. பூச்சியத்திற்கும் குறைவான உறைபனியில் வாழ்வா, சாவா போராட்டம். உயிர்க்காத்துக் கொள்ள மரணத்தின் விளிம்புக்கே போக வேண்டிய சூழ்நிலை. 
அவர்களால் தப்பிப் பிழைக்க  முடிந்ததா, இல்லையாவென்று? 
படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு இடையில் இருவருக்குமிடையில் மலரும் மெல்லிய நேசம் காதலாக பரிணமிக்கிறது. மனதால் ஒன்றானாலும், நிஜத்தில் இணைவது அத்தனை சுலபமில்லை என்பது இருவருக்குமே தெரியும்.
நாயகி போவதோ தன்னுடைய திருமணத்திற்கு. நாயகனோ ஏற்கனவே திருமணம் ஆனவர்.
எவ்வகையில் இவ் உறவுக்கு நியாயம்  கற்பிக்க முடியுமென்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு விடையை நான் சொல்லப்போவது கிடையாது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Kate Winslet,  Idris Elba இருவரும் கதைக்கு பொருத்தமான தேர்வு. இவர்களால் நமக்கு படத்துடன் ஒன்றிப் போக முடிகிறது.
Idris இன் நடிப்பு மற்றும் உணர்வுகளை வெளிக்காட்டும் விதம் முகபாவனைகள் என எல்லாமே இயல்பாகவும் ரசிக்கும் படியும்  உள்ளது. அமெரிக்க கருப்பின நடிகர்களால் மட்டும் எப்படி எந்த பாத்திரத்திலும் கனக்கச்சிதமா பொருந்தி போக முடிகிறது என்று தெரியவில்லை. இப்பொழுது 
Denzel Washington, Morgan Freeman , Samuel L. Jackson வரிசையில் 
Idris Elba வையும் 
சேர்த்துக் கொண்டேன்.
Kate Winslet இன் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு செம்மை.
மொத்தத்தில் இக்கதைக்கு 
இருவரும் சிறப்பான தேர்வுதான்.


எழுத்தாளர் Charles Martin னுடைய 
The mountain between us நாவலைத்தான் படமாக்கி உள்ளார் இயக்குனர் Hany Abu-Assad, 
நாவலை சிதைக்காமல் படமாக்கி உள்ளாராவென்று கேட்டால் 
எனக்கு  தெரியாது ஆனால் படம் அருமையாக வந்துள்ளது. 
இவரின் மற்றைய படங்களை 
தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டார்.

Feel good movie ! நீங்களும் 
முயற்சித்துப் பார்க்கலாம். 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I