பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
The Richest Man in Babylon
நீண்ட நாட்களாக மனதில் கேட்கப்பட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு தெளிவான பதிலை
தந்த புத்தகமிது. பொதுவாக நான் வாசிக்கும் எல்லா நூல்களை பற்றியும் சிறுகுறிப்பு எழுதவேண்டுமென்று நினைப்பேன். பிறகு நேரப்பற்றாக்குறை காரணமாக எழுத முடிவதில்லை. (கொஞ்சம் சோம்பேறித்தனமும்) ஆனால் இதை பற்றி எழுதியே ஆகவேண்டும்.
நிதி நிர்வாகம் பற்றிய அடிப்படை அறிவை பெறுவதற்கு எளிய மொழியில் புனையப்பட்ட
மிக சிறப்பான நூல்.
பணத்தை எப்படி சிறப்பாக நிர்வாகம் செய்வது? எவ்வாறு லாபமிட்டும் முறையில் முதலீடுவது? என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு
இன்றைய உலகில் யூ டுயூப் சேனல்கள், புத்தகங்கள், இணையதளங்கள் என ஆயிரம் வழிகள் உண்டு. அவை அனைத்தும் லட்சங்களை மில்லியனாக மாற்றுவது எப்படியென்று கற்றுத்தரும். ஆனால் இங்கு
நம் நிலைமையோ வேறு, சில ஆயிரங்களே மாதவருவாய்.
வரவும் சிலவும் சமமாகயிருக்கும். இதில் எப்படி சேமிப்பது? பிறகு
எப்படி முதலீடு செய்வது? எந்த காலத்தில் செல்வந்தன் ஆவது? இவை எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலை இந்த புத்தகம் தரும்.
ஹாடோனிஸ்டாக (வாழ்கையை கொண்டாடி, இன்புற்று வாழ்தல்)
வாழ வேண்டுமென்றால் முதலில் பணத்தை எப்பிடி சம்பாதித்து, சேமித்து சிறப்பான வழியில் முதலீடு செய்து பணக்காரனாக மாறுவது என்பதை கற்றுக்கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் பிடித்த ஓரு புத்தகத்தை வாங்குவதற்கு கூட
ஓர் தடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டிவரும். தேவைகளை, விருப்புகளையும் ஓர் அளவிற்கு மேல் சுருக்கும் பொழுது வாழ்வே நரகமாகிவிடும்!
பாபிலோன் இன்றைக்கு வரலாற்றில் இருந்து அழிந்து போன நகரம்.
ஓரு காலத்தில் செல்வம் கொட்டிக்கிடந்த பூமி.
காய்ந்து வறண்ட பாலை நிலம், விவசாயத்திற்கு தோதான நிலமில்லை. நீர் நிலைகள் இல்லை. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் மட்டும் பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். நகரத்தை சுற்றி பிரமாண்டமான மதில் சுவற்றை எழுப்பி அதையொட்டி அகன்ற அகழிகளை உருவாக்கி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தேசம். ஆற்றிலிருந்து நெடும் தூரத்திற்கு பெரிய கால்வாய்கள் மூலம் நீரை பயிர்நிலைகளுக்கு கொண்டுச் செல்லும் ஆதி தொழில்நுட்பம் அவர்களுடையது.
எல்லாவகை கணக்கு வழக்குகளையும், அவர்கள் சுட்ட களிமண் ஏடுகளில் பதிவு செய்து வைத்திருந்தனர்.
(அக்காலகட்டத்தில் கடதாசி கண்டுப்பிடிக்கபட்டிருக்கவில்லை) பிற்காலத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கைகளில் அவை கிடைத்த பொழுது திகைத்து போனார்கள். எக்கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் நிதி நிர்வாகம் சார்ந்த குறிப்புகள் அவை.
பணத்தின் இயல்புகளை தெளிவா வகுத்து இருந்தார்கள். அவற்றை சரியா புரிந்துகொண்டால் போதும் எவரும் செல்வந்தர்களாகிவிடலாம்.
சம்பாதிக்க, சேமிக்க, முதலீடு
செய்ய, கடன்வாங்க, கடன் கொடுக்க, தொழில் தொடங்க, தீராக்கடன் தொல்லையிலிருந்து மீளவென
அக்களிமண் ஏடுகளில் இருக்கும் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை எளிமையாக புனைவு கதைகளின் ஊடாக
இன் நூல் நமக்கு சொல்கின்றது. உதாரணத்திற்கு ஒரே ஓரு விஷயத்தை மட்டும் கீழே உள்ள பத்தியில் விளக்கி உள்ளேன்.
உங்கள் மாதவருமானத்திலிருந்து பத்து சதவீதத்தை கட்டாயமாக சேமிக்க வேண்டும். சேமிக்கும் பணம் ஓரு கட்டத்தில் பல்கி பெருக ஆரம்பிக்கும். பிறகு அதன் வருவாயை மட்டும் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் சேமிக்கும் மூலத்தொகையில் கைவைக்கவே கூடாது. இது அடிப்படை.
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல் என்னவென்றால் வரவும் சிலவும் சரியாகயிருக்கும் பொழுது எப்படி சேமிக்க முடியும் என்பது தான்? ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு ஏற்ப புதிய தேவைகளை உருவாக்கிவிடுவோம். சில சமயங்களில் நமக்கு நாமே கறாராக இருந்து பழக்கப்படுத்திக் கொள்வதுதான் சேமிப்பிற்காண
ஒரே வழி.
"பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்" புத்தகத்தை கட்டாயம் படியுங்கள். இன் நூல் உங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டாலும் போடலாம்.
பின்குறிப்பு: இது வரை இரண்டு மில்லியன்னுக்கும் அதிகமான பிரதிகள் விற்கபட்ட நூல். தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைக்கும்.
© நரேஷ் 08-30-2019
Waw superw and usefull bro
ReplyDeleteThank you dear!
Deleteஎப்பா வணக்கம் இது Sri vani vasan
ReplyDelete