Posts

Showing posts with the label Movie Reviews

96 ராமும் சுமார் மூஞ்சி குமாரும்

Image
பள்ளி காலத்து முதல் காதலை மிக அழகா காட்டிய படம் 96. அந்த வயசுல வருவது காதல் இல்லை அது எதிர்பால் மேல் ஏற்படும் ஈர்ப்புனு சொல்லுவாங்க எனக்கு என்னமோ அது சந்தேகமாதான் இருக்கு அந்த காதலின் அழகும், ஆழமும்  வளர்த்த பிறகு வரும் பக்குவப்பட்ட காதலில் இருப்பதில்லை இங்கு சில எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கும் ஆனால் பள்ளி காதல் அப்பிடி இல்ல கடைக்கண் பார்வை போதும் பட்டாம்பூச்சி மனசுல பறக்க, அவள் சுண்டு விரல் ஸ்பரிஸம் போதும் ஆயிரம்  பேரழகிகளுடன் காமுற்றாலும் அந்த இன்பத்துக்கு இணையாகாது.  கண்டால் பேச்சு வராது. காணவிட்டால் தூக்கம் வராது. காதலை உணரும் தருணங்கள் சுகமாவும். ரணமாகவும் மொத்தத்தில் வாழ்வின் மிக அற்புதமான நாட்கள் ! தேவதை என்ற வெறும் வார்த்தைக்கு உயிர் கொடுப்பாள். ஒரு ஆண், பெண்னை கொண்டாடும் காலம் வார்த்தை கொண்டு உயிர்ப்பிக்க முடியாது. அவள் மட்டும் யாதும்மாகி நிற்பாள். பிரியாமல் கூடவே இருந்தா போதும் அது மட்டுமே தேவையாக இருக்கும். காமத்திற்கு அங்கு வேலை இருக்காது காதல் மட்டுமே.96 அந்த உணர்வ மென்மையா, அழகா பதிவு செஞ்சு இருக்கு.  இந்த படத்தை ஆண்கள் கொண்டாடியதின் காரணம...

The Family Man 2019

Image
எதேட்ச்சையாகதான் இந்த வெப்சீரிஸ் கண்ணுலபட்டுச்சி. நமக்கு பிடிச்ச Genre வேற, ரேட்டிங்கும் நல்லா இருக்க சரி பார்க்கலாமுன்னு முடிவு பண்ணுனேன். முதல் எபிசொட்லையே விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. முடிவுவரை  தொய்வே இல்லை.   கதையோட ஒன்லைன் இதுதான் மிடில் கிளாஸ் குடும்பஸ்தன் ஆன ஸ்ரீகாந்த், நேஷனல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சில (NIA) ஏஜென்டா இருக்கும் தீவிர நாட்டுப்பற்றுடைய குடிமகனும் கூட. குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு,  தன்வேலையையும் எப்படி சமாளிச்சு கொண்டு போறாங்குறதுதான் கதை. இவங்க அமைப்பின் நோக்கம்  என்னன்னா? நாட்டில் தீவிரவாதிகளினால் ஏற்படப்போகும்  அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துறது. அதற்காக நேரம் காலம் பார்க்காமல் உயிரைப்பணையம் வைத்து கடுமையாக வேலைப்பாக்குறாங்க.  Manoj Bajpai நடிப்பை பற்றி சொல்லியே ஆகணும். Gangs Of Wasseypur படத்துல மனுஷன் என்னமா நடிச்சு இருப்பாருனு தெரியும். பக்கா வில்லத்தனம். சிரிப்பை பார்த்தாலே எவன் தலையை அறுக்க போறானோன்னு பயமாயிருக்கும். இந்த சீரிஸ்ல வேறு ஓரு முகத்தை பார்க்கலாம். வீட்டுல பசங்ககிட்ட...

கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)

Image
கும்பலாங்கி_நைட்ஸ் 2019 / மலையாளம் Kumbalangi Nights என் ப்ளே லிஸ்ட்ல எப்பவுமே ஒரு முப்பது, நாற்பது படங்கள் கிடப்புல கிடக்கும். சில சமயங்களில் ஒரு பிடிப்பு இல்லாமல் எதை பாக்குறதுனு முடிவு எடுக்க கஷ்டமா சோம்பலா இருக்கும் ஒரு தருணத்துல தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா ப்ளே பண்ணுது மட்டும் தான் முடிவு மட்டும் அதுவா கூட்டிட்டு போயிடுச்சு கொஞ்சம் கூட சலிப்பு தட்டல செம்ம பீல் குட் மூவி! மலையாளத்துல மட்டும் எப்பிடி இந்த மாதிரி அழகான படங்களை எடுக்குறாங்கனு தெரியல! கும்பலாங்கி கேரளாவில் உள்ள நீரால் சூழப்பட்ட அழகான (ஒரு குட்டி தீவு) கிராமம். அங்கு வசிப்பவர்களுக்கு மீன் பிடி தான் பிரதான தொழில். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலுனு பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இதமாக இருக்கும் இயற்கை வனப்பு மிகுந்த நிலம், படத்தோட அழகே இந்த ஊரும் அங்கு வாழும் மனிதர்களும் தான். படம் தொடங்கி சில நிமிடங்களில் சஜிக்கும் பொபிக்கும் ஒரு சண்டை காட்சி வரும் இந்த இடத்தில் கொஞ்சம் மனச தேர்த்திக்கிருங்க விசேஷமா ஆண்களுக்கு இந்த எச்சரிக்கை.  பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் சும்மா பிடிச்சு நசுக...

இஃக்லூ | 2019 | தமிழ் படம்

Image
இஃக்லூ 2019 / தமிழ் படம் ஸ்பாய்லர்ஸ் இல்லை ஆனால் எச்சரிக்கை பண்ணுறேன் மனச கல்லாக்கிட்டு இந்த படத்தை பாக்குறதுனா பாருங்க இல்லாட்டி தவிர்த்துருங்க. நான் பார்த்துட்டு ஒரு நாள் முழுவதும் படத்தோட தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியாம தவிச்சேன்! சில சமயங்களில் என்னத்த மெச்சூர்ட் ஆகிட்டோம்? இன்னும் சின்னபுள்ளையாட்டம் படம் பார்த்து அழுதுட்டு இருக்கமேனு வெட்டகமாயிருக்கு! சமீப காலத்துல வந்த தமிழ் படங்களில் அருவி படத்துக்கு பிறகு என்னை  ரொம்ப அழுகவச்சபடம் இதுதான். கண்ணு கலங்குறதுக்கும், அழுறதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு ஒரு கணம் கண்ணீர் துளி எட்டிப்பார்த்துட்டு போறதுக்கும். தொடர்ச்சியாக வழியிறதுக்கும் உள்ள வேறுபாட்டதான் சொல்லுறேன். நிறைய படங்கள் கண்ணை கலங்க வச்சிருக்கு ஆனால் இந்த படம் அழுகவச்சிருச்சி! இத்தனைக்கும் பிற மொழிகளில் அழுவாச்சி படமுன்னு கேள்விப்பட்டால் தவிர்த்துருவேன். ஆனால் தமிழ் படமுன்னு வரும் போது அதை பண்ணமுடியாதே, இங்கு எப்பயாச்சும் ஒரு நாள் தான் இந்த மாதிரி நடக்கும். இவ் வகையான சில படங்களை பார்க்கும் போது கற்பனை கதை என்பதையும் மறந்து கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளை...

Pink | 2016 | Hindi Movie

Image
Pink 2016 / Hindi Movie ஒரு நல்ல படம், சிறந்த ஆசான். இப்படி இருந்தா நல்ல பொண்ணு, இப்படி எல்லாம் இருந்தா ஒழுக்கம் கெட்டவள் என்று நம்ம சமூகத்தில் சில அளவீடுகள் உண்டு. இரவில் பெண்கள் தனியாக வெளியில் போகலாமா?, கவர்ச்சியாக உடை அணியலாமா? , மது அருந்தலாமா? இது சரியா தவறா? என்பதையும் தாண்டி இந்த பெண்களின் பாலியல் சார்ந்த மனநிலை எப்படி? இவர்களை போன்ற  பெண்கள் இலகுவாக படுக்கைக்கு வர கூடியவர்களா? கவர்ச்சியாக உடை அணிந்து , சகஜமாக ஆண்களுடன் நெருங்கி பழகி மது அருந்தும் பழக்கமும் உள்ள ஒரு பெண்ணை, பொது புத்தி உள்ள ஆண் எப்படி பார்ப்பான்? இதை நம் சமூகம் எப்படி பார்க்கின்றது, அந்த பெண்ணின் மனநிலை என்ன? ஒரு பெண் ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்கின்றாள் என்றால் அது அவள்  முழுமனத்துடன் ஒத்துழைத்தாள் தான் உண்டு. மாறாக முடியாதுனா முடியாது தான்., அது மனைவியாக, காதலியாக  அல்லது விபச்சாரியாக இருந்தால் கூட இது பொருந்தும். சில விஷயங்கள் உணர்வுபூர்வமானவை அவற்றை  வார்த்தை கொண்டு விபரிக்க முடியாது. அதை அழகாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் Aniruddha Roy Chowdhury, இந்த படம் நவநாகரீக பெ...

Perfume

Image
2008 ஆம் வருடம் அப்போ நான் உயர்தரத்தில் (A/L) விஞ்ஞான பிரிவில் படிச்சுட்டு இருத்தேன். எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அந்த நேரத்துல பொண்ணுங்க வாசனையே தெரியாம காஞ்சி போய்ட்டு இருந்த காலக்கட்டம், முத்தம் கூட குடுத்தது இல்லை. ஆனா அவன் அப்பவே எல்லா மேட்டரும் முடிச்சிட்டு இருந்தான். இத்தனைக்கும்  என்ன விட வயசு குறைவு. ஒரு நாள் என்கிட்டே வந்து மச்சான்  School Science Leb ல இருந்து எனக்கு கொஞ்சம் மதுசாரம் (Alcohol) வேணும்னா, நான் எதுக்குடானு கேட்டேன். பர்ஃப்யூம்  ஒன்னு ரெடி பண்ண போறேன் அதுல மதுசாரத்தின் அளவு அதிகமா இருந்தா பொண்ணுகளுக்கு அந்த வாசனை ரொம்ப பிடிக்கும் அதுனாலதான்டானு சொல்ல. உனக்கு இதெல்லாம் எப்பிடி தெரியுமுன்னு கேட்டேன். பெர்ப்யூம் பற்றி நிறைய தகவல் சொன்னான், ஆண்களுக்கு செய்யப்படும் பெர்ப்பியூமில் பெண்களுக்கு பிடிச்ச வாசனை அதிகமா இருக்க மாதிரி தயார் பண்ணுவாங்க, அதேபோல் பெண்களின் பெர்ப்பியூமில் ஆண்களை மயக்க கூடிய வாசனை திரவியங்கள் மிகையா இருக்கும். வாசனை நல்லா இருக்கேனு மாத்தி அடிச்சிகிட்டா பொண்ணுகளுக்கு பதில் பசங்க தான் நெருங்கி வருவானுக அப்பிடி, இப்படினு ஒரு ...

நீ தானே என் பொன்வசந்தம்

Image
என் மனசுக்கு நெருக்கமான (நெருடலான) சில படங்களை மறுமுறை பார்க்ககூடாது என நினைத்து கொள்வேன்  அந்த பட்டியலில் இருந்த   ஒரு படம் தான் நீ தானே என் பொன்வசந்தம்.இந்த படத்தை   பார்க்காமலிருக்க காரணம் ,  நித்தியா கதாபாத்திரம் எனக்குள்  ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியை இன்று வரை என்னால் தாண்டி வரமுடிவில்லை.   கடந்து வந்து பாதையின் சில கருப்பு பக்கங்களை எனக்கு ஞாபக படுத்திவிடும். சரியாக 7 வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கும்   ஆசை வந்தது சில நேரங்களில் நாஸ்டால்ஜியாவும் பிடிக்கும்.   ஏக்கங்களும் ,  பரிதவிப்பும் இல்லாத வாழ்க்கையில் என்னத்தான் சுவையிருந்திடபோகுது. புதுவித அனுபவத்தை பெற   இந்த படத்தில் நித்தியாவின் முகத்தை மட்டும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பாருங்கள் அதுதான் இந்த படமே அந்த கோபம் ,  புன்னகை ,  அன்பு ,  குறும்பு ,  ஏக்கம் ,  என தன் முகபாவங்களினுடாக வருணுக்காக பரிதவிக்கும் ஒவ்வொரு வினாடியையும் வார்த்தைகள் இன்றியே மிக அழகாக நம்மனதுக்குள் கடத்தி விடுவாள். கூடவே உங்களுக்கு பிரியமானவளை மனதில் நி...