நீ தானே என் பொன்வசந்தம்





என் மனசுக்கு நெருக்கமான (நெருடலான) சில படங்களை மறுமுறை பார்க்ககூடாது என நினைத்து கொள்வேன் 
அந்த பட்டியலில் இருந்த ஒரு படம் தான் நீ தானே என் பொன்வசந்தம்.இந்த படத்தை பார்க்காமலிருக்க காரணம்நித்தியா கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியை இன்று வரை என்னால் தாண்டி வரமுடிவில்லை. கடந்து வந்து பாதையின் சில கருப்பு பக்கங்களை எனக்கு ஞாபக படுத்திவிடும். சரியாக 7 வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கும் ஆசை வந்தது சில நேரங்களில் நாஸ்டால்ஜியாவும் பிடிக்கும். ஏக்கங்களும்பரிதவிப்பும் இல்லாத வாழ்க்கையில் என்னத்தான் சுவையிருந்திடபோகுது.


புதுவித அனுபவத்தை பெற இந்த படத்தில் நித்தியாவின் முகத்தை மட்டும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பாருங்கள் அதுதான் இந்த படமே அந்த கோபம்புன்னகைஅன்புகுறும்புஏக்கம்என தன் முகபாவங்களினுடாக வருணுக்காக பரிதவிக்கும் ஒவ்வொரு வினாடியையும் வார்த்தைகள் இன்றியே மிக அழகாக நம்மனதுக்குள் கடத்தி விடுவாள். கூடவே உங்களுக்கு பிரியமானவளை மனதில் நினைத்து கொள்ளுங்கள் ஒரு வேலை அவள் பிரித்து போயிருந்தால் மிக பொருத்தமாக இருக்கும் (இந்த யோசனை ஆண்களுக்கு மட்டும்) படம் முடியும் மட்டும் மனதை அலைக்கழிக்காமல் நித்தியாவில் மட்டும் லயித்து இருங்கள். நித்தியாவிற்கு வருணுக்கும் இடையிலான நட்பு எட்டு வயதில் ஒன்றாக விளையாடுவதில் ஆரம்பித்து பள்ளிகல்லூரிகாலங்களில் காதலாகிவளர்ந்து. பக்குவபபட்ட பின்னரும் தொடரும் உறவில் நடக்கும் ஊடலும்கூடலும் தான் முழுப்படமுமே.

படமுழுவதும் நித்தியா மயம்தான் !
"விண்ணை தாண்டி வருவாயா" படத்தில் எப்படி ஆணின் மனநிலையிலிருந்து கதை சொல்லப்பட்டிருக்குமோ அதேபோல்  "நீ தானே என் பொன்வசந்தம்" காதலனின் பிரிவில் தவித்திருக்கும் பெண்ணின் இடத்திலிருந்து கதை சொல்லப்பட்டிருக்கும்வருணின் மேல் உன்மத்தம் கொண்டு அவள் ஏங்கும் ஏக்கம்இவன் என் இப்பிடி புரிஞ்சுக்காம நித்தியாவ கஷ்டப்படுத்துறானு பல இடங்களில் வருண் மேல் எரிச்சலுண்டாகுது. அப்பிடி என்னத்தான் ரெண்டு பேருக்கும் இடையிலுள்ள பிரச்னை?

எதுவுமே உடனே கிடைச்சுட்டா அதோட பெறுமதி தெரியாது இல்லையா அந்த மாதிரி தான் வருணுக்கு நித்தியா. ஜாதிமதம்அந்தஸ்த்து இப்பிடி எந்த சமூக காரணமுமே இடையூறா வரலகாதலர்களுக்கு இடையான ஈகோ தான் இங்கே வில்லன் ! அதுவும் வருணுக்கு கொஞ்சம் அதிகமாகவே. இலகுவா கடந்து போக வேண்டிய விஷயத்தை பெருசாக்கி பிரிஞ்சு போயிடுறாங்க. வருண் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த குடும்பத்துக்கு ஏதாச்சும் பண்ணனும் பாக்குறான். அந்த சமயத்துல நித்தியாவுக்கான நேரம் ஒதுக்க முடியல அதோடு தன்னவிட வசதியா இருக்கா அவள்மாதிரி எதிர்காலத்தை பற்றிய பயம் இல்லாம இருந்திடமுடியாது நாமளும் செட்டில் ஆகணும் என்ற தாழ்வு மனப்பான்மை வேறகொஞ்சம் விலகி நடத்துகிறான். ஆனால் நீங்கி போகும் எண்ணம்மில்லை. இந்த திடீர் புறக்கணிப்பு அவளுடை மனச கஷ்டப்படுத்துமேனு நினைச்சு பார்க்கலஅவனேட சூழ்நிலை அப்படி.

சில வருடங்கள் கழிச்சு தன்னோட பிரச்சனை எல்லாம் முடிஞ்ச பிறகு நித்தியாவ தேடி போறான்தன் பக்கம் உள்ள நியாயத்தை சொல்லி சமாதான படுத்த பாக்குறான் ம்ம்ம்.....! சரிபட்டுவரல. திடிர்னு விலகி போவஇடைப்பட்ட காலத்துல எந்த தொடர்பும் இல்ல இப்போ நீ வந்து கூப்பிட்டது உடனே வந்துரணுமானு கேட்டு கோபப்படுவாஅது நியாயமும் கூட. அதேநேரம் மனசுல "என்னை கட்டிபுடிச்சி எனக்கு நீ வேணும் நித்தியானு சொல்லு வருண் இப்பவே உன்கூட வந்துருவேன் நினைச்சிப்பா" இருந்தாலும் வெளியகாட்டிக்காம பிடிவாதமா மறுக்க. இப்படி ரெண்டு பேரும் ஒருத்தர் மாறி ஒருத்தர குறைசொல்லி மறுபடியும் சண்டையில முடியுது. வருணும் கோபத்துல உனக்கு நா வேணான்னா எனக்கும் நீ தேவையில்லனுட்டு திரும்பி வந்துடுறான்.

சில மாதங்கள் கழித்து அவள் கோபம் தீரும் போது வருணுக்கு வேற ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சியமாகிடுது. இத சற்றும் எதிர்பார்க்காத நித்தியா உடைஞ்சு போய்டுரா ! விடிஞ்சா வருணுக்கு கல்யாணம் இனி அவன் அவளுக்கு இல்லை. வருண் என்னை தேடி வந்திருக்கும் போதே நான் பேசியிருக்கனும். நல்லா சொதப்பிட்டேன் இனிமேல் எதையும் சரி பண்ணமுடியாதுனு நினைத்து தவிக்குற தவிப்பு இருக்கே !
வார்த்தைகளால் விபரிக்கமுடியதா நரகவலி.
குறுந்தொகை பாடல்களில் தலைவன் பிரிவினால் வாடும் தலைவிதுயர்ரூட்டு தவிப்பது போல நிறைய பாடல்களுண்டு. இப்போ நித்தியாவை மனசுல நினைச்சுகிட்டு இந்த பாடலை படிச்சு பாருங்க....

"செல்வார் அல்லர்" என்று யான் இகழ்ந்தனரே
"ஓல்வாள் அல்லள்" என்று அவர் இகழ்ந்தனரே: 
ஆயிடைஇரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்குஎன் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
(ஒளவையார் பாடல்பாலை)
தலைவி தனக்கு நேர்ந்த பிரிவு பற்றித் தோழியிடம் கூறுகிறாள். 'அவர் பிரிந்து செல்லமாட்டார்என்று நான் பொருட்படுத்தாமல் பெரும்படியாக இருந்துவிட்டேன். அவரும் 'வருந்தமாட்டாள்என்னை நினைத்துவிட்டார் இப்படி இருவரும் குருட்டு தைரியத்தில் இருந்த நம்பிக்கை இப்போது பூசலாக மாறி என் நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கின்றது. அவர் பிரிந்து பொய்விட்டார். நச்சுப்பாம்பு கடித்தது போல என் நெஞ்சு குமுறுகிறது.

நீ தானே என் பொன்வசந்தத்தில்
நித்தியாவாக வாழ்ந்த சமந்தாவுக்கு மொத்தமாக ஆறு விருதுகள் கிடைச்சிது. சமந்தாவின் திரைஉலகவாழ்க்கையில் இந்த படம் ஒரு மையில்கல். நாயகனை விட நாயகிக்கு முக்கியத்துவமளித்த உருவாக்கப்படும் வெகுசில படைப்புகளில் இதுவும் ஓன்று. சமந்தா தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். ஜீவாவும் தன்னோடே பாத்திரத்தை சிறப்பா பண்ணிட்டாருவருண்மேல ரசிகர்களுக்கு வரும் சின்ன கோபமே அதற்கு சான்று. பள்ளி பருவத்தில்கல்லுரிக்காலத்தில் 

பிறகு வளர்த்து என ஜீவாவும்சமந்தாவும் உடல்இடையை குறைத்துபின்பு அதிகரித்து வித்தியாசம் காட்டியுள்ளார்கள். 
இருவரின் உடல்வாகும் ஒவ்வொரு பருவத்திலும் நம்பும்படியாக இருக்குபொன்வசந்ததிற்கு எல்லா வகையிலும் சரியான தேர்வுதான் இருவரும். இந்த படத்தில் இளையராஜா சார் மேஜிக் பண்ணிருப்பாரு! பின்னனி இசையிலும் சரிநா.முத்துக்குமாரின் வரிகளில் உருவான பாடல்களிலும் சரி நமக்கு பிடிச்சவங்கள (நம்மை பிரிஞ்சவங்கள ) நினைக்கவச்சி கொண்ணுடாரு மனுஷன் !
மொத்தமா 8 பாடல்கள் இருக்கு எல்லா பாட்டுமே செம்மயாயிருக்கு.
"முதல் முறை பார்த்த ஞாபகம்",
"சற்று முன்பு பார்த்த மேகம்"
இந்த ரெண்டு பாட்டு கேட்கும் போது அப்பிடியே மனசெல்லாம் ஏதே பண்ணும்!

"சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போககாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக" இந்த வரிகள கேட்கும் போது காதலிச்சவள நானும் என்னை அவளும் யாரோ மாதிரி கடந்து போன தருணங்களை நினைச்சு பார்ப்பேன். எப்படி இருந்த உறவு இன்று தலைகீழா மாறிக்கிடக்குனு ! Its very painfull.

கீழ் இருக்க வரிகளை படிச்சு பாருங்க....
"ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடாதூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடாவாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா 
தேங்கி போன ஒரு நதியேன இன்று நானடா..... !!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையேதன்னம் தனிகாட்டில் எந்தன் காதல் வாட ! ".
இந்த இரண்டு பாடல்களும் படத்தில் தொடர்ச்சியாகயிருக்காது பொருத்தமான சந்தர்ப்பங்களில் மட்டும் காட்சி பின்னணியில் ஒலிக்கும்.
ரெண்டாவது பாட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகளை மட்டும் எழுதியருக்கேன் வாசிச்சு பாருங்க
"முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய் விழியினில் ஏனோ ஒரு ஈரம்"
"சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் எங்க வைத்தாய்
வெயிலாமழையாவலியா,
சுகமா எது நீ ?"
"ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றால் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??"

இந்த பாட்டுல இருக்க ஒவ்வொரு வரியையும் உணர்ந்து கேட்டுப்பாருங்க
மனசு லேசா வலிக்கும் !. ராஜிவ் மேனனின் பட்டறையில் பட்டம் தீட்டப்பட்ட வைரம் தான் கெளதம் வாசுதேவ்மேனன்குருநாதரின் அப்டேட் வேர்சன் னு சொல்லலாம். மணிரத்னம் சார்ட டச்சும் இருக்கும் அதேநேரம் புதுசாவும் இருக்கும். ஒவ்வொரு frame யும் ரசிச்சுரசிச்சு நேர்தியா அழகா வைப்பாறு. கதைமாந்தர்களும் தனிரகம்.
இந்த படத்தின் கதை ரேஷ்மா கட்டாலாதிரைக்கதை வசனம் ரேஷ்மாவுடன்சேர்ந்து கெளதம் சாரும் எழுதி இயக்கிருக்காரு. ஒரு பெண் எழுதிய கதை+ திரைக்கதைனாலதான் நித்தியாவின் பாத்திரம் நேர்த்தியா அழகா வந்து இருக்குனு நினைக்குறேன்கூடவே கெளதம் சார்ட ட்ரீட்மெண்ட் செம்மையா ஒர்கவுட் ஆகிடுச்சி. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல்படங்களில் இதற்கு தனியிடம் எப்பொழுதுமுண்டு.


Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I