அனஸ்தீசியா (Anaesthesia)

மயக்க மருந்து என்ற ஒன்று கண்டுப் பிடிக்கபடுவதற்கு முன்னர் இருந்தே, மனிதன் அறுவைச் சிகிச்சைகளை செய்யத் தொடங்கி விட்டான். 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் போது நோயாளி கடுமையான வேதனையை பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதிகப்படியான இரத்த இழப்பும் ஏற்பட்டது. வாயில் ஒரு மரக்கட்டையை கடிக்கக் கொடுத்து, படுக்கையுடன் சேர்த்து பிணைத்து கட்டி விட்டு, ஆட்டை அறுப்பது போல அறுக்க ஆரம்பித்து விடுவார்கள். வலியை குறைக்க ஓபியம் (opium), சில வகை மூலிகைகள் பயன்படுத்தபட்ட போதும். அவை பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அவற்றினால் மூளைக்கு தூண்டுதலை ஏற்படுத்தி வலி, சூடு, குளிர் போன்றவற்றை உணரச் செய்யும் நரம்பு தொகுதிகளை கட்டுப்படுத்தி வலியை குறைக்க முடியவில்லை. அவற்றின் வீரிய குறைவே இதற்கு காரணம். இந்த பழமையான அறுவை சிகிச்சைகளின் சில சமயங்களில் நோயாளியின் தலையில் ஓங்கி ஒன்று போட்டு நினைவிழக்க செய்து அவசர அவசரமாக சிகிச்சையை மேற்கொள்ளவார்கள். அத்தருணங்களில் சிலர் பாதியில் விழித்துக் கொண்டு மருத்துவர்களை காண்டாக்குவார்கள், ஒரு சிலர் நிரந்தரமாக கண்ணை மூடி விடுவார்கள். பெரு...