அனஸ்தீசியா (Anaesthesia)

மயக்க மருந்து என்ற ஒன்று கண்டுப் பிடிக்கபடுவதற்கு முன்னர் இருந்தே, மனிதன் அறுவைச் சிகிச்சைகளை செய்யத் தொடங்கி விட்டான். 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் போது நோயாளி கடுமையான வேதனையை பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதிகப்படியான இரத்த இழப்பும் ஏற்பட்டது. வாயில் ஒரு மரக்கட்டையை கடிக்கக் கொடுத்து, படுக்கையுடன் சேர்த்து பிணைத்து கட்டி விட்டு, ஆட்டை அறுப்பது போல அறுக்க ஆரம்பித்து விடுவார்கள். வலியை குறைக்க ஓபியம் (opium), சில வகை மூலிகைகள் பயன்படுத்தபட்ட போதும். அவை பெரிதாக கைக்கொடுக்கவில்லை. 
அவற்றினால் மூளைக்கு தூண்டுதலை ஏற்படுத்தி வலி, சூடு, குளிர் போன்றவற்றை உணரச் செய்யும் நரம்பு தொகுதிகளை கட்டுப்படுத்தி வலியை குறைக்க முடியவில்லை. அவற்றின் வீரிய குறைவே இதற்கு காரணம்.
இந்த பழமையான அறுவை சிகிச்சைகளின் சில சமயங்களில் நோயாளியின் தலையில் ஓங்கி ஒன்று போட்டு நினைவிழக்க 
செய்து அவசர அவசரமாக
சிகிச்சையை மேற்கொள்ளவார்கள். 
அத்தருணங்களில் சிலர்
பாதியில் விழித்துக் கொண்டு மருத்துவர்களை காண்டாக்குவார்கள், ஒரு சிலர் நிரந்தரமாக கண்ணை மூடி விடுவார்கள். பெரும்பாலான
அறுவை சிகிச்சைகள்
கொடுமையான வேதனையுடனும், உயிர் இழப்புடனும் தான் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யோசித்து பாருங்கள் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என…,
இன்று சிறு வலி கூட தெரியாமல் டாக்டர்கள் நமக்கு அறுவை சிகிச்சைகளை செய்து முடித்து விடுகிறார்கள்.

அனஸ்தீசியா என்றால் என்ன?

அறுவை சிகிச்சைக்கு முன்பாக 
வாயு அல்லது ஊசி மூலமாக நம் உடம்பில் செலுத்தப்படும் ஒரு மருந்தாகும். அது நம் உடலினுள் சென்று வலி, சூடு, குளிர் போன்ற உணர்த்திறனை பெற்று மூளைக்கு கடத்தி சென்று உணர செய்யும் நரம்பு மண்டலத்தின் வேலையை தற்காலிகமாக தடுத்து நிறுத்தி, நம் சுயநினைவை குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு அற்றுப் போகச் செய்யும். இதற்காக பிரதானமாக Nitrous Oxide, Ether போன்ற இரசாயன வஸ்துகள் பயன்படுத்தபடுகிறது.

Anaesthesia என்ற பெயர் 18 ஆம் நூற்றாண்டில் க்ரீக் மொழியிலிருந்து தோன்றிய வார்த்தையாகும். "An" என்றால் 'அற்ற' என்றும் "aesthesia" எனறால் உணர்வு என்றும் அர்த்தமாகும்.

1799 ஆம் ஆண்டில் பிரித்தானியவை சேர்ந்த Humphry Davy என்னும் இரசாயனவியலாளர்
தன் ஆய்வு கூடத்தில் வாயுக்களின் இயல்புகளை பற்றிய பரிசோதனையை செய்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தற்செயலாக Nitrous oxide வாயுவை சுவாசிக்க நேர்ந்தது. அந்த தருணத்தில் மனதையும், உடலையும் ஏதோவொன்று இலகுவாக உணர செய்து, திடீர் உற்சாகத்தையும் சந்தோசத்தையும், தந்து வலியை மர(ற)க்கச் செய்ததை உணர்ந்தார்.
இதற்கு காரணம் Nitrous oxide தான் என்பதை கண்டுக் கொண்டவர், அதற்கு Laughing gas என்ற பெயரையும் சூட்டினார். தனது வினோதமான கண்டுபிடிப்பினால் தூண்டப்பட்ட Humphry, ஒரு நாள் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து Nitrous oxide வாயுவை 
சுவாசிக்க செய்து தன் கண்டுப் பிடிப்பை உறுதி செய்துக் கொண்டார். அப்பொழுது தான் இதை ஏன் அறுவை சிகிச்சைகளின் போது வலி நிவாரணியாக பயன்படுத்தக் கூடாது என்ற யோசனை முதன் முதலா தோன்றியது. இருப்பினும்
உடனே அது நடைமுறைக்கு வரவில்லை. அவருக்கு பின்னர் 
பலர் அந்த ஆய்வை தொடர்ந்தனர்.
முறையான மருத்துவ பயன்பாட்டுக்கு வருவதற்கு பல தசாப்தங்கள் சென்றது.  

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I