கடலும் கிழவனும் (The old man and the sea)

கடலும் கிழவனும் (குறுநாவல்) The old man and the sea எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நோபல் பரிசு வென்ற இலக்கிய படைப்பான "The old man and the sea" குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான "கடலும் கிழவனும்" படித்தேன். அருமையான அனுபவம். தமிழ் மொழிபெயர்ப்பில் 130 பக்கங்கள், ஆங்கிலத்தில் வேறும் 34 பக்கங்கள் மட்டுமே (Ebooks). பிறகு ஆங்கில மூலத்தையும் வாசித்தேன். முதல் முதலில் நான் ஆங்கிலத்தில் படித்த நாவல். ம்ம்ம்.... மொசமில்லை நமக்கும் புரியுது. இது நல்ல ஒரு ஆரம்பம் தான். இவ் அற்புதமான படைப்பை பற்றி ஒரு நாலு வரி நல்லதா எழுதிட்டு போகலாம்னு தோணுது. ஒருநாள் இந்த புத்தகம் உங்கள் கைகளுக்கு வரும் போது என்னுடைய பதிவை வாசித்த ஞாபகம் வந்து ஒரு வேலை வாசிக்ககூடும். தமிழிலே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கு, ஆங்கிலத்திலும் பிற உலக மொழிகளிலும் சேர்த்து கோடிகளை தொட்டுவிடும். இன்றைய திகதியில் ஆரம்பித்தாலும் படித்து முடிக்க நம் ஆயுள் காலமே போதாது! யாராச்சும் நாலு பேர் தொடர்ந்து ஒரு புத்தகத்தை பற்றி எழுதும் பொழுதுதான் நமக்கு படிக்க தோணும். எனக்கு இந்த புத்தகம் சில வருடங்களு...