Posts

Showing posts from January 19, 2020

இரண்டு கிழவர்கள் (லியோ டால்ஸ்டாய்)

Image
மொழிபெயர்ப்பு கதை தமிழில்: ரேவதி கேசவமணி  இரண்டு கிழவர்கள் டால்ஸ்டாயின் மிக பிரபலமான கதைகளில் ஒன்று. சிறிய கதை தான். வேறும் 48 பக்கங்கள் மட்டுமே, ஒரே அமர்வில் படித்து முடித்து விடலாம். இந்த கதையை அனைத்து வயதினரும் படிக்கலாம். முக்கியமா  உங்கள் பிள்ளைகளுக்கு இந்த புத்தகத்தினை வாங்கி கொடுத்து வாசிக்க சொல்லுங்கள். இல்லாவிட்டால் நீங்களே படித்துகாட்டுங்கள். இதன் சாரத்தினை உள்வாங்கிவிட்டால் அந்த பிள்ளை எதிர்காலத்தில் இனவாதியாகவோ, மதவெறி பிடித்தவனாகவோ, தீவிரவாதியாகவோ மாறமாட்டான் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். மொத்தத்தில் அவனால் இந்த சமுதாயத்திற்கு எவ்வித கெடுதலும் நேராது.  சகமனிதன் பசித்திருக்கும் போது அதைக் கண்டுகொள்ளாது கடவுளுக்கு  கோடிக் கோடியா கொட்டி கொடுத்தும். வழிபாடுகள் செய்தும் எவ்வித பலனும் இல்லை. அன்புதான் சிவம். கடமைக்காக இறைவனை தொழுவதை காட்டிலும். சக உயிர்களிடத்தில் நீ காட்டும் கருணைதான் உன் கடவுளை திருப்தி படுத்தும். உன் கடவுள் எந்த மதமாகயிருந்தாலும் சரி, அல்லது நீ எந்த கடவுளை வணங்குபவனாக இருந்தாலும் சரி இது பொருந்தும். நானும் டால்ஸ்டாய் படிக்கிறேன் என்ப

காதல்காரி

Image
பைத்தியக்காரத்தனமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் மீண்டும் அவனை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. என் முன்னால் இரண்டடி தூரத்தில்  தான் அமர்ந்திருக்கின்றான். அவன் முகத்தில் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லை. அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.  காதலித்த நாட்களில் நான் அவனுடன் பேசியதை விட அவன் கண்ணுடன்  பேசியது தான் அதிகம். இன்றும் அதைத்தான் தொடர்ந்து கொண்டிருந்தேன்.  எனக்கு அது சுலபமாகயிருந்தது. உண்மையாகவும் தைரியமாகவும் பேசிக்கொள்வோம். அவனை விட அவன் கண்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். ஒருவேளை அது அவனிடம் நான் பேசியதையெல்லாம் பகிர்ந்திருக்கலாம். நான் ஒரு முட்டாள் அவன் கண்கள் அவனுக்கு நேர்மையாக இருக்காதென்று எப்படி நம்பலாம். ஸஹர் கலிஃபா  சொல்வது போல காதல் விஷயத்தில் என் அறிவு துணை நிற்பதில்லை.  ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் என்னத்தான் வாய் கிழிய பேசினாலும். மண்டை வெடித்து போகும் அளவுக்கு வாசித்தாலும். காதல்வயப்படும் பொழுது எதுவுமே எனக்கு உதவியதில்லை. அத்தருணங்களில் அவனை போன்று என் அறிவும் என்னை கைவிட்டு விடும். அடித்த அன்னை சிறிது

நடுநிசி

எனக்கு அப்பொழுது எட்டு வயது. தொண்ணூறுகளின் ஆரம்பக்காலம். வவுனியாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சிதம்பரபுரம் அகதி முகாமில் வசித்த நாட்கள். ஒரு பக்கம் புலிகளுக்கும். இலங்கை அரசாங்கத்திற்கும் உக்கிரமாக சண்டை நடந்த காலக்கட்டம். எங்கள் முகாமுக்கு வருடம் முழுவதும் அகதிகள் வருவதும். போவதுமாக இருப்பார்கள். பெரும்பாலும் சொந்த இடத்துக்கு திரும்பி போகமுடியாமால் அங்கேயே வருடக்கணக்கில் தங்கி விடுபவர்கள் அதிகம். அகதி முகாம் என்றாலும் பரப்பளவிலும் அமைப்பிலும் ஓர் கிராமத்தை ஒத்தது. நூலகம், கிராமசேவகர் அலுவலகம், காவல் நிலையம், கோயில், மைதானம் எல்லாமுண்டு. ஆனால் சொந்தமாக நிலம் வாங்கவோ, விற்கவோ  முடியாது. முதலில் அங்கு நிலம் வாங்கும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் யாருக்கும் இருக்கவில்லை. பெரும்பாலும் எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள். மூன்று வேலை சாப்பாட்டுக்கே படு திண்டாட்டமாகதானிருக்கும். அரசாங்கத்தின் ரேஷன் அரிசியில் தான் பலர் உயிர்காத்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தில்   வீடு வாசல், வாழ்வாதாரத்தை விட்டு, உடுத்திய உடுப்புடன் கையில் அகப்பட்டதை காவிக்கொண்டு இரவோடு இரவாக வந்த சனம் தான். உடனே