இரண்டு கிழவர்கள் (லியோ டால்ஸ்டாய்)

மொழிபெயர்ப்பு கதை
தமிழில்: ரேவதி கேசவமணி 

இரண்டு கிழவர்கள் டால்ஸ்டாயின் மிக பிரபலமான கதைகளில் ஒன்று. சிறிய கதை தான். வேறும் 48 பக்கங்கள் மட்டுமே, ஒரே அமர்வில் படித்து முடித்து விடலாம். இந்த கதையை அனைத்து வயதினரும் படிக்கலாம். முக்கியமா 
உங்கள் பிள்ளைகளுக்கு இந்த புத்தகத்தினை வாங்கி கொடுத்து வாசிக்க சொல்லுங்கள். இல்லாவிட்டால் நீங்களே படித்துகாட்டுங்கள். இதன் சாரத்தினை உள்வாங்கிவிட்டால் அந்த பிள்ளை எதிர்காலத்தில் இனவாதியாகவோ, மதவெறி பிடித்தவனாகவோ, தீவிரவாதியாகவோ மாறமாட்டான் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். மொத்தத்தில் அவனால் இந்த சமுதாயத்திற்கு எவ்வித கெடுதலும் நேராது. 

சகமனிதன் பசித்திருக்கும் போது அதைக் கண்டுகொள்ளாது கடவுளுக்கு 
கோடிக் கோடியா கொட்டி கொடுத்தும். வழிபாடுகள் செய்தும் எவ்வித பலனும் இல்லை. அன்புதான் சிவம். கடமைக்காக இறைவனை தொழுவதை காட்டிலும். சக உயிர்களிடத்தில் நீ காட்டும் கருணைதான் உன் கடவுளை திருப்தி படுத்தும். உன் கடவுள் எந்த மதமாகயிருந்தாலும் சரி, அல்லது நீ எந்த கடவுளை வணங்குபவனாக இருந்தாலும் சரி இது பொருந்தும்.

நானும் டால்ஸ்டாய் படிக்கிறேன் என்பதற்காக படிக்காமல். அதில் உள்ள விஷயத்தை உள்வாங்கி கொண்டால் அந்த எழுத்தின் நோக்கம் முழுமை பெரும். அதுதான் வாசிப்பின் மூலம் நாம் பெரும் ஞானமாகும்.

நரேஷ் 
01-17-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I