Memories of Murder (2003)

Memories of Murder No Spoilers உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். தென் கொரியாவில் உள்ள Hwaseong, Gyeonggi என்னும் மாநிலத்தில் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1991ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொடர் மர்மகொலைகள் நிகழ்கின்றன. கொலைக்காரனை கண்டுபிடிக்க மூன்று துப்பறிவாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள். புலி வேட்டைக்கு குருவி பிடிப்பவர்களை அனுப்பிய கதையாக மாறிப்போகிறது. தேடலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலைகளும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இவர்களும் விடுவதாகயில்லை. நேரம் காலம் பாராது தேடுகிறார்கள். மேலிடத்திலிருந்து அழுத்தமும் அதிகரிக்கின்றது. நாட்கள் நகர, நகர இவர்களின் நிலைமை பரிதாபமாகிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு புரிகிறது தாங்கள் தேடுவது, சாதாரணமான கொலைகாரனல்ல கொடூரமான சைக்கோவென்று. நிகழ்ந்த கொலைகளை ஆராய்ந்து பார்த்த பொழுது அனைத்திலும் சில ஒற்றுமைகளை காணமுடிகிறது. கொலையுண்டவர்கள் அனைவரும் பெண்கள். மரணித்த விதமும் ஒன்றே, அவர்களின் உயிரை பறிக்க பயன்படுத்தியது அவர்களின் உள்ளாடையை. ஒவ்வொருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொல்...