Posts

Showing posts from August 29, 2019

கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)

Image
கும்பலாங்கி_நைட்ஸ் 2019 / மலையாளம் Kumbalangi Nights என் ப்ளே லிஸ்ட்ல எப்பவுமே ஒரு முப்பது, நாற்பது படங்கள் கிடப்புல கிடக்கும். சில சமயங்களில் ஒரு பிடிப்பு இல்லாமல் எதை பாக்குறதுனு முடிவு எடுக்க கஷ்டமா சோம்பலா இருக்கும் ஒரு தருணத்துல தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா ப்ளே பண்ணுது மட்டும் தான் முடிவு மட்டும் அதுவா கூட்டிட்டு போயிடுச்சு கொஞ்சம் கூட சலிப்பு தட்டல செம்ம பீல் குட் மூவி! மலையாளத்துல மட்டும் எப்பிடி இந்த மாதிரி அழகான படங்களை எடுக்குறாங்கனு தெரியல! கும்பலாங்கி கேரளாவில் உள்ள நீரால் சூழப்பட்ட அழகான (ஒரு குட்டி தீவு) கிராமம். அங்கு வசிப்பவர்களுக்கு மீன் பிடி தான் பிரதான தொழில். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலுனு பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இதமாக இருக்கும் இயற்கை வனப்பு மிகுந்த நிலம், படத்தோட அழகே இந்த ஊரும் அங்கு வாழும் மனிதர்களும் தான். படம் தொடங்கி சில நிமிடங்களில் சஜிக்கும் பொபிக்கும் ஒரு சண்டை காட்சி வரும் இந்த இடத்தில் கொஞ்சம் மனச தேர்த்திக்கிருங்க விசேஷமா ஆண்களுக்கு இந்த எச்சரிக்கை.  பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் சும்மா பிடிச்சு நசுக்குற