கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)




கும்பலாங்கி_நைட்ஸ்
2019 / மலையாளம்
Kumbalangi Nights

என் ப்ளே லிஸ்ட்ல எப்பவுமே ஒரு முப்பது, நாற்பது படங்கள் கிடப்புல கிடக்கும். சில சமயங்களில் ஒரு பிடிப்பு இல்லாமல் எதை பாக்குறதுனு முடிவு எடுக்க கஷ்டமா சோம்பலா இருக்கும் ஒரு தருணத்துல தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா ப்ளே பண்ணுது மட்டும் தான் முடிவு மட்டும் அதுவா கூட்டிட்டு போயிடுச்சு கொஞ்சம் கூட சலிப்பு தட்டல செம்ம
பீல் குட் மூவி! மலையாளத்துல மட்டும் எப்பிடி இந்த மாதிரி அழகான படங்களை எடுக்குறாங்கனு தெரியல! கும்பலாங்கி கேரளாவில் உள்ள நீரால் சூழப்பட்ட அழகான (ஒரு குட்டி தீவு) கிராமம். அங்கு வசிப்பவர்களுக்கு மீன் பிடி தான் பிரதான தொழில். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலுனு பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இதமாக இருக்கும் இயற்கை வனப்பு மிகுந்த நிலம், படத்தோட அழகே இந்த ஊரும் அங்கு வாழும் மனிதர்களும் தான்.

படம் தொடங்கி சில நிமிடங்களில் சஜிக்கும் பொபிக்கும் ஒரு சண்டை காட்சி வரும் இந்த இடத்தில் கொஞ்சம் மனச தேர்த்திக்கிருங்க விசேஷமா ஆண்களுக்கு இந்த எச்சரிக்கை.  பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் சும்மா பிடிச்சு நசுக்குற மாதிரியான (மனசை சொன்னேன்) பயங்கர சண்டை காட்சி.
ஒரு வேலை பிரெங்கி மட்டும் தடுத்து நிறுத்தி இல்லனா? நடந்து இருக்கும் அசம்பாவிதத்தை கற்பனை பண்ணி பார்க்கவே முடியல.... (இன்னும் படம் பார்க்காதவங்க ரொம்ப யோசிக்க வேணாம். பார்த்தவுடன்  நான் சொல்லுறது புரியும் )

சரி யாரு? இந்த சஜி, பொபி, பிரெங்கி இன்னும் ஒருத்தரும் இருக்காரு, போன்நி நாளும் பேரும் சகோதரங்க. அப்பா இறந்துட்டாரு அம்மா கூட இல்லை.
அம்மா இல்லாத வீடு எப்பிடி இருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. பிரெங்கியும் பாபியையும் தவிர மற்றய ரெண்டு பேரும் பொறுப்பு இல்லாம சும்மா ஜாலியா இருக்கும் உருப்படிகள்.
இப்படி இருக்கும் போது இவங்க நாலு பேர் வாழ்க்கையிலையும் தோழியா, காதலியா, பெண்கள் வந்த பிறகு எப்படியெல்லாம் கதைமாறி பயணப்படுது என்பது தான் படம்.

அதே ஊருல இன்னோரு பக்கம் நம்ம பகத் பாசில் வேற தனி காட்டு ராஜாவா இருப்பாரு, ஓரு கட்டத்துல நம்ப பொபியும் அவங்க சகோதரர்களும் பகத்த சந்திக்க வேண்டிய சூழ்நிலை  வரும் அங்கயிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கும். நடுவிலே கொஞ்சம் பதட்டம் தொற்றி கொண்டாலும் மிகை இல்லை. நிறைய பிளாக் ஹியுமர் வந்து எல்லாத்தையும் சரி பண்ணிடுது. கும்பலாங்கியை பார்த்த பிறகு எதுக்கு பகத் பாசிலை ரசிகர்கள் இப்படி
கொண்டாடி தீர்க்குறாங்கனு புரிஞ்சுது. ப்ப்ப்ப்ப்பா! சும்மா சொல்ல கூடாது ஒரு கலக்கு கலக்கிட்டாரு மனுஷன். என்னா ஒரு நடிப்பு...! கடைசி காட்சி வரை மனுஷனை அனுமானிக்கவே முடியல பக்கா வில்லத்தனம். இப்போ பகத்ட ஒவ்வொரு படமா தேடி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிட்டேன்.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன். நம்ம #இஷ்க் ஹீரோக்கு (Shane Nigam) போற இடத்துல எல்லாம் முத்தம் கேக்குறேதே வேலையா போச்சு பாவம் பையன்.
காதல், நட்பு, சகோதர பாசம் எல்லாத்தையும் கலந்து யதார்த்ததோடு பொருந்தி போகும் விதத்தில் படத்தை சிறப்பா எடுத்து இருக்காங்க. திகட்டாத அளவில் மசாலா தடவப்பட்ட இயல்பான சினிமா. இரண்டு மணிநேரம் நிம்மதியா உட்கார்ந்து பார்க்கலாம். அதுக்கு நான் உத்தரவாதம் தாரேன்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I