அன்புள்ள கண்ணம்மாவிற்கு

அன்புள்ள கண்ணம்மாவிற்கு முகப்புத்தகத்தில் எதோச்சையாக உன் புகைப்படம் பார்த்தேன். உன்மேல் இருந்த கோபம் எல்லாம் மறந்து உடனே பேசவேண்டும் போலிருந்தது. புறக்கணிக்கபட்ட இடத்தில் உனக்கு என்ன வேலையேன்று மனம் எச்சரித்தும் நான் கேட்கவில்லை. மீண்டும் உன்னால் தூக்கியெறியபட்டேன். எல்லா தவறுகளையும் நீ செய்து விட்டு செய்யாத தவறுக்காக என்னை மோசமாக வஞ்சித்துவிட்டாய். காதலில் இறைஞ்சு கேட்கலாம், காதலை மட்டும் இறைஞ்சு கேட்டு பெறுவதில் எனக்கு உடன்பாடுயில்லை. நீயே சொல் அம்மாவிடம் என்னை நேசி, என்மீது அன்புக்காட்டு என்று பிச்சை கேட்க முடியுமா? அது இயற்கையாக நிகழும் ஒன்றல்லவா? அது போலதான் எனக்கு நம் காதல் நீ என் நேசத்தை உதாசீனபடுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது இல்லை தாங்கிகொள்ளவே முடியாது! ஒரு விடியலின் ஆரம்பத்தில் உன் குறும்செய்தியில் வரும் காலை வணக்கம், ஒரு நாள் தவறினாலும் நான் வாடிபோவதை ஏனோ நீ அறிய மறந்து போனாய்! ஒரு கட்டத்தில் முன்னறிவிப்புயின்றி விலகி சென்றுவிட்டாய். நான் துடித்து போவேன் என்பது கூட உனக்கு எப்படி புரியாமல் போனது? மறுநாள் திரும்பி வருவாய் சரியான காரணங்களை என்னிடம் உரைப்பாய...