Posts

Showing posts with the label சிறுகதைகள்

நரகம்

Image
விளக்கிலிருந்த கடைசி சொட்டு   மண்ணெண்ணையும் எரிந்து  தீர்ந்து கொண்டிருந்தது. காற்றின் போக்கில் ஆடியப்படியிருந்த  விளக்கின் சுவாலை மெதுமெதுவாக சிறுத்து ஒளியிழந்து கடைசியில் முழுதாக அணைந்து போனது.  அந்த கணம் திரியின் செந்தணலில் இருந்து நீண்டு எழுந்த கரும்புகை ஓர் நேர்க் கோடாக மேல் நோக்கி சென்று மறைந்தவுடன் திரியின் தணலும் அணைந்து வெளிச்சம் முழுதாக நீங்கி, வீடு முழுவதும் கும்மிருட்டானது.  அணைந்து போன குப்பி விளக்கை  வெறித்து பார்த்தபடி வீட்டுத் திண்ணையிலிருந்த மண்திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் இருபுறமும் பிள்ளைகளும் இருந்தார்கள். கூடவே பல நாட்கள் அடிப்பட்டு நெளிந்து போயிருந்த வடுவுடன், அவர்களின் துயர வாழ்க்கையின் அடையாளமாக  ஒரு பழைய அலுமினிய சோற்றுப் பானையும் இருந்தது. அன்றிரவு நேரம் கடந்து போயிருந்தும் மூவரும் சாப்பிட்டிருக்கவில்லை.  மிச்சமிகுதியிருந்த அரிசியும் பகலுடன் தீர்ந்து போயிருந்தபடியால்  இரவுணவு சமைக்கவென எதுவும் மீந்திருக்கவில்லை. பிள்ளைகள் அன்று வீட்டில் நிகழ்ந்த  அசம்பாவிதத்தில் உண்டான அத...

பிணந்தின்னிகள்

Image
என் நிர்வாண உடலை ஊரே கூடி  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. நான் எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன நடந்தது? எதுவும் விளங்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்து கொண்டிருக்கின்றேன் ஆனால் முடியவில்லை. என் உடல் நிலத்தில் கிடையாக வானம் பார்த்தப்படி கிடக்கிறது. கைகளும் கால்களும் நான்கு திசையிலிருந்த  மரத்துடன் சேர்த்திழுத்து அசைக்க முடியதாப்படி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது.  அவர்கள் ஒரு பக்கம் கயிராக எனது மார்புக்கச்சையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  யோனியிலிருந்து வடிந்த குருதி நிலத்தில் படிந்து சிகப்புத்திட்டுகளாக காய்ந்து போயிருந்தது. அதில் எறும்புகளும், ஈக்களும் தங்களுக்கான    ஆகாரத்தை தேடிக்கொண்டிருந்தன, இத்தனை நடந்தும் நான் எவ்வித வலியையும் உணரவில்லை.  ஒரு நாளுக்கு மேலாக இங்கே கிடக்கிறேன். உடல் உப்பி, அழுக தொடங்கிவிட்டது போல? கூடியிருந்த சனம் மூக்கை மூடிக்கொண்டதை கவனித்தேன். கடுமையான துர்நாற்றம் காற்றில் கலந்திருக்க கூடும். எனக்கு இப்பொழுது எழுந்திருக்க வேண்டும். ஆனால் என் கட்டுக்களை அவிழ்த்துவிடயாரும் முயற்சிக்ககூட இல்லை. வெறுமனே வேட...

நடுநிசி

எனக்கு அப்பொழுது எட்டு வயது. தொண்ணூறுகளின் ஆரம்பக்காலம். வவுனியாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சிதம்பரபுரம் அகதி முகாமில் வசித்த நாட்கள். ஒரு பக்கம் புலிகளுக்கும். இலங்கை அரசாங்கத்திற்கும் உக்கிரமாக சண்டை நடந்த காலக்கட்டம். எங்கள் முகாமுக்கு வருடம் முழுவதும் அகதிகள் வருவதும். போவதுமாக இருப்பார்கள். பெரும்பாலும் சொந்த இடத்துக்கு திரும்பி போகமுடியாமால் அங்கேயே வருடக்கணக்கில் தங்கி விடுபவர்கள் அதிகம். அகதி முகாம் என்றாலும் பரப்பளவிலும் அமைப்பிலும் ஓர் கிராமத்தை ஒத்தது. நூலகம், கிராமசேவகர் அலுவலகம், காவல் நிலையம், கோயில், மைதானம் எல்லாமுண்டு. ஆனால் சொந்தமாக நிலம் வாங்கவோ, விற்கவோ  முடியாது. முதலில் அங்கு நிலம் வாங்கும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் யாருக்கும் இருக்கவில்லை. பெரும்பாலும் எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள். மூன்று வேலை சாப்பாட்டுக்கே படு திண்டாட்டமாகதானிருக்கும். அரசாங்கத்தின் ரேஷன் அரிசியில் தான் பலர் உயிர்காத்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தில்   வீடு வாசல், வாழ்வாதாரத்தை விட்டு, உடுத்திய உடுப்புடன் கையில் அகப்பட்டதை காவிக்கொண்டு இரவோடு இரவாக வந்த ச...