தயக்கம்

(குறுங்கதை) மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே தன் அறைக்கு வரும்படிச் சொன்னாள். இளம் வயது, மாநிறம், பேரழகி கிடையாது. ஆனால் அழகி! ஏற்ற இறக்கங்கள் இரக்கமே இல்லாமல் வஞ்சிக்கக் கூடியது. தெரியாமல் சைட் அடிப்பான். இப்பொழுது நிறைமாதக் கர்ப்பிணி, அவள் தாயாக மாறிக்கொண்டிருக்கும் போது ஏனோ அந்த எண்ணம் தோன்றுவதில்லை. மேல் மாடிக்கு ஓட்டமும் நடையுமாக குதித்து சென்றான். அவளுக்கும் இவனைப் பிடிக்கும். பெரிய திறமைசாலியோ, பட்டப்படிப்பு முடித்தவனோ கிடையாது ஆனால் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்துவிடுவான். சமவயது உடைவளாக இருந்தாலும் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்துக் கொள்வான். அதனால் இவன் மீது தனிப்பிரியமுண்டு. அறைக்குள் நுழைந்து முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தான். அவளும் இயல்பாக வேலைத் தொடர்பான உரையாடலை ஆரம்பித்தாள். அன்று அவள் பிங்க் நிற உடையில் இருந்தாள். அவளை பார்த்த அடுத்த நொடி வசியம் செய்யப்பட்டவன் போல சொக்கிப்போய் நின்றான்! எதோ ஓர் தாய்மையுடன் கூடிய பேரழகு அவள் தோற்றத்தில், நொடிக்கு நொடி அவ் அழகு கூடிக்கொண்டிருந்தது. அவள் முகத்தை...