தயக்கம்

(குறுங்கதை)

மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே தன் அறைக்கு வரும்படிச் சொன்னாள். இளம் வயது, மாநிறம், பேரழகி கிடையாது. ஆனால் அழகி! ஏற்ற இறக்கங்கள் இரக்கமே இல்லாமல் வஞ்சிக்கக் கூடியது. தெரியாமல் சைட் அடிப்பான். இப்பொழுது 
நிறைமாதக் கர்ப்பிணி, அவள் தாயாக மாறிக்கொண்டிருக்கும் போது ஏனோ அந்த எண்ணம் தோன்றுவதில்லை.

மேல் மாடிக்கு ஓட்டமும் நடையுமாக 
குதித்து சென்றான். அவளுக்கும் 
இவனைப் பிடிக்கும். பெரிய திறமைசாலியோ, பட்டப்படிப்பு 
முடித்தவனோ கிடையாது ஆனால் 
கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்துவிடுவான். சமவயது உடைவளாக இருந்தாலும் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்துக் கொள்வான். அதனால் இவன் மீது தனிப்பிரியமுண்டு.  

அறைக்குள் நுழைந்து முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தான். அவளும் இயல்பாக வேலைத் தொடர்பான உரையாடலை ஆரம்பித்தாள். அன்று அவள் பிங்க் நிற உடையில் இருந்தாள். அவளை பார்த்த அடுத்த நொடி வசியம் செய்யப்பட்டவன் போல சொக்கிப்போய் நின்றான்!
எதோ ஓர் தாய்மையுடன் கூடிய 
பேரழகு அவள் தோற்றத்தில்,
நொடிக்கு நொடி அவ் அழகு கூடிக்கொண்டிருந்தது.
அவள் முகத்தை அவனால் 
பார்க்க முடியவில்லை.
பார்த்தால் கண்களை மட்டுமே
பார்த்தான். அது அங்கும் 
மிங்கும் உருண்டு நர்த்தனமாடிக்கொண்டிருந்தது.
அந்த நேர்க்கொண்டப் பார்வை 
அவளை ஏதோ செய்தது. 
நாவைப் போல கண்கள் பேசுவதை 
நாம் நினைத்தாலும் தடுக்க 
முடியாதல்லவா, ஒரே வழி திசை திருப்புவதுதான். முயற்சிதான், முடியவில்லை. அவையன்று 
அவன் கட்டுப்பாட்டிலில்லை. 
இருவர் கண்களும் அடிக்கடி 
நேரடியாக மோதிக்கொண்டன!
அவள் பேச்சில் கவனத்தைச் 
செலுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான், 
அதிலும் தோல்வியடைந்தான்.
அவள் உதடு அசைவதை மட்டும் 
தான் பார்க்க முடிந்தது. வேறெதுவும் 
காதில் விழவில்லை. அவளைப் 
பார்க்காமல் பார்வையை 
திசைமாற்றி மேலே, கீழே என 
திரும்பி சமாளித்துப் பார்த்தான் 
எதுவும் வேலைக்கு ஆகவில்லை. 
அங்கு நிகழ்வதை அவளாலும் உணரமுடிந்தது. ஏன் இப்படி 
தடுமாறிக் கொண்டிருக்கிறான் 
என்று குழப்பமாக இருந்தாள். 
எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிலைமையை சரி செய்ய உதவிக் கொண்டிருந்தாள். இவனுக்கு மூச்சி முட்டி ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. முழுதாக பத்து நிமிடம் 
கூட கடந்திருக்காது. அதற்குள் 
பெரும் மனப்பிரளயமே அவனுக்குள் நிகழ்ந்து விட்டிருந்தது. எப்பொழுது 
பேச்சை முடிப்பாள் இந்த இடத்தை 
விட்டு எழுந்து ஓடுவோம் 
என்றிருந்தான். காமுற்று குறி நிமிரவுமில்லை, காதலுறவும் இல்லை மொத்தத்தில் தனக்கு 
என்ன நேர்ந்ததென்று மட்டும் அனுமானிக்க முடியவில்லை. 

ஒருவாறு பேச்சு முடிவுக்கு வந்தது. 
அவள் நீட்டிய பயிலை வாங்கிக் 
கொண்டு வேகமாக அந்த அறையை 
விட்டு நகர்ந்து வெளியே வந்து 
ஆசுவாசமாக நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டான்.

"மேடம் இன்னைக்கு நீங்க செம்ம 
கியூட்டா இருக்கீங்க" 

என்று சொல்லிவிட்டிருந்தால், 
அவள் என்ன உன்னை கொலையா செய்திருப்பாள்!? என தனக்குள் கேட்டுக்கொண்டான். அது ஏனோ 
அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பிரிதொரு நாளில் இதைச் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தபடியே உதட்டளவில் சிரித்தப் படி தன் இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I