மஜ்னூன் - சுகந்தியின் வாசிப்பனுவம்

புத்தகம் : மஜ்னூன் (மின்னூல்) ஆசிரியர்: நரேஷ் மாட்டு பொங்கலுக்கு மொத்தமா வடை பாயாசம் பழம் விதவிதமான காய்கறிகள் சோறு குழம்பு பூசணிக்காய் எல்லாத்தையும் பிசைந்து உருண்டையாக குடுப்பாங்க. ஒரு வாய்க்கு ஒரு மாதிரியான ருசியில் இருக்கும் . அது மாதிரி இருக்கு இந்த புத்தகம் . விரக்தி 'அமானுஷ்யம்' சுற்று சூழல்' நகைச்சுவை,கோபம் ,இயலாமை, அறிவியல், தத்துவம் ,காதல் ,காமம், பழி ,கொலை, ஏலியன், மறுபிறவி ,வறுமை. ஏமாற்றம், வன்கொடுமை என அத்தனையும் கலந்து கட்டியிருக்கார். அதிலும் ஒன்று, இரண்டு,மூன்று வரிகள், மூன்று வார்த்தைகளில் வரும் கதைகள் எல்லாம் செம! புதிய எழுத்தாளரும் பழைய எழுத்தாளரும் உரையாடல் சரியான காமெடி! பிரசர் குக்கர் கதையில் கார்ப்பரேட் கம்பெனிகளில் முழி பிதுங்குபவர்களின் நிலையை சொல்லியிருப்பது மன அழுத்தத்தின் வெளிப்பாடு "மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்டு, தன் பிம்பம் கரைவதைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகைத்தபடியே வெளிவருவார்கள்....