மஜ்னூன் - இந்துவின் வாசிப்பனுவம்

தலைப்பு: மஜ்னூன் 
ஆசிரியர்: நரேஷ் 
நம் குழுவின் நண்பர் நரேஷின்
முதல் குறுங்கதை தொகுப்பு. ப்ரியதர்ஷினியின் அறிமுகத்தால் நானும் வாசித்தேன். சலிப்பில்லாத வாசிப்பிற்கு உத்தரவாதம் தரும் அற்புதமான கதைகள் உள்ளன. தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை என்றால் தயக்கம் என்கிற கதையை சொல்வேன். சம வயதுடைய பெண் மேலதிகாரியாக இருக்கும் போது அவளிடம் நீ அழகாய் இருக்கிறாய் என்கிற விஷயத்தை சுலபமாய் சொல்ல முடியாமல் மனதில் எழும் தயக்கத்தை அப்பட்டமாய் சொல்லி இருக்கும் விதம் அருமை. அங்கு  யாரும் புலப்பட வில்லை கதையில் யாரு பேயாக இருப்பார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது.
மஜனூன் என்கிற தலைப்பிற்குரிய கதையும் வெகு வித்யாசமான கதைக்களம் கொண்டது. நறுமுகை என்கிற கதையில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு காதலாக இருப்பதும் ஒரு ஆணின் எதிர்பார்ப்பு எவ்வளவு காதலாக இருப்பினும் காமமே அங்கு போட்டியில் ஜெயிக்கிறது என்பதையும் கோடிட்டு காட்டியதாக எனக்கு தோன்றுகிறது. காதல் கதைகள் ஒன்றை தவிர பெரும்பாலும் சோகத்தையே வெளிப்படுத்த்துவது எனக்குள் சிறு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏழு நிமிடங்கள் மற்றும் மிகைல் எ ஐ என்கிற கதைகள் அறிவியல் புனைவுக்கான நல்ல முயற்சிகள் என்றே சொல்லலாம். வறுமையை சொல்லும் நரகம், பிணந்தின்னிகள் ஆகிய இரண்டு கதைகளையும் வாசிக்கவே முடியாத அளவுக்கு துக்கத்தை கடத்துகின்றன. நாலே  நாலு வரிகளில் கூட சிறுகதையை எழுதிவிட முடியும் என்று நிரூபிக்கிறார் நரேஷ்.  சிறப்பான  ஆரம்பம் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை கொடுக்க நரேஷுக்கு என் வாழ்த்துக்கள். அமேசான் கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறது.
பக்கங்கள் : 116

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I