ஊரில் ஒருவரும் வாசிப்பதில்லை

ஒரு காலத்தில் பந்தி பந்தியா எழுதிய நீண்ட பதிவுகளை கண்டால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். கொஞ்சநேரம் ரிலேக்ஸ்சா பேஸ்புக் பார்க்கலாமுன்னு வந்தா இவனுங்க வேற இவ்வளவு நீளமா எழுதி சாகடிக்கிறானுகனு மனசுல தோணும். அதிலும் குறிப்பாக சினிமா, நூல் அறிமுகம் என தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பதிவுகள் வரும்போது பிடிப்பதேயில்லை. இவனுகளுக்கு வேற வேலையேயில்லையா? எப்பபார்த்தாலும் இதுமட்டுமானு மனதில் எண்ணிக்கொள்வேன். இது மூன்று வருடங்களுக்கு முன்னரான என் மனநிலை. இப்போ பாருங்க எதை வெறுத்தேனொ அதுவாகவே மாறிவிட்டேன். இப்பொழுதெல்லாம் நான் இடும் நீண்ட பதிவுகளை கண்டு என் நண்பர்கள் தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திட்டுவது எனக்கு தெளிவா கேட்கும். பெருசு பெருசா எழுதி படுத்துறான். நிம்மதியா முகப்புத்தகத்துல உலாத்த கூட முடியலன்னு. ஏழு வருடங்களுக்கு முன்பு கண்டி சிட்டி சென்டரில் ஒரு புத்தக கண்காட்சி நடந்தது. நான் மிகுந்த ஆவலுடன் போயிருந்தேன். எங்கு தேடியும் தமிழ் புத்தகங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை. சிங்கள, ஆங்கில புத்தகங்கள் மட்டும் நிறைந்து கிடந்தது. பெருத்த ஏமாற்றத்த...