Posts

Showing posts with the label best movies in 2019

ஜல்லிக்கட்டு

Image
2019 / மலையாளம்  சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் பனியுகம் உருவாகி வருடக்கணக்காக நீளும். அக்காலகட்டத்தில் பூமியின் மேற்பரப்பு முழுவதும் ஐஸ்கட்டியாளும் பனியினாலும் மூடிக்கிடக்கும். இந்த புவி உருவாகியகாலம் தொன்றுதொட்டு நிகழும் ஒரு காலநிலை மாற்றம். இப்பொழுது அதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  மனிதஇனம் உருவாக தொடங்கிய  யுகத்தின் ஆரம்பகாலக்கட்டத்தில் இது போன்று ஒரு அசாதாரண காலநிலை உருவாகிய பொழுது அதுவரை தாவர பட்சிணியாக  கனிகளையும், கிழக்குகளையும், இலைதளையும் உணவாக உட்கொண்டிருந்த நாம் பனியுகத்தில் பெரும்பாலான தாவரங்கள் எல்லாம் அழித்து போனதால் ஆகாரம் எதுவும் கிடைக்காமல் பசியால்வாட நேர்ந்தது. உடனே மாற்றி யோசிக்க ஆரம்பித்த மனிதன் அன்று தொடக்கம் விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்ண ஆரம்பித்தான்.  பரிணாமத்தில் நம்மை விட பின்தங்கிய இன்னொரு மனித இனமான நியண்டதல் மனிதர்கள் அழிந்து போனதற்கு அவர்கள் உணவாக மாமிசத்தை உண்ண மறுத்தது பிரதானமான காரணம். கடைசியில் தாவர உணவு கிடைக்காமல் பட்டினியால் பூண்டோடு மடிந்து போனார்கள். கற்கால...