ஜல்லிக்கட்டு


2019 / மலையாளம் 

சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் பனியுகம் உருவாகி வருடக்கணக்காக நீளும். அக்காலகட்டத்தில் பூமியின் மேற்பரப்பு முழுவதும் ஐஸ்கட்டியாளும் பனியினாலும் மூடிக்கிடக்கும். இந்த புவி உருவாகியகாலம் தொன்றுதொட்டு நிகழும் ஒரு காலநிலை மாற்றம். இப்பொழுது அதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
மனிதஇனம் உருவாக தொடங்கிய  யுகத்தின் ஆரம்பகாலக்கட்டத்தில் இது போன்று ஒரு அசாதாரண காலநிலை உருவாகிய பொழுது அதுவரை தாவர பட்சிணியாக  கனிகளையும், கிழக்குகளையும், இலைதளையும் உணவாக உட்கொண்டிருந்த நாம் பனியுகத்தில் பெரும்பாலான தாவரங்கள் எல்லாம் அழித்து போனதால் ஆகாரம் எதுவும் கிடைக்காமல் பசியால்வாட நேர்ந்தது. உடனே மாற்றி யோசிக்க ஆரம்பித்த மனிதன் அன்று தொடக்கம் விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்ண ஆரம்பித்தான். 
பரிணாமத்தில் நம்மை விட பின்தங்கிய இன்னொரு மனித இனமான நியண்டதல் மனிதர்கள் அழிந்து போனதற்கு அவர்கள் உணவாக மாமிசத்தை உண்ண மறுத்தது பிரதானமான காரணம். கடைசியில் தாவர உணவு கிடைக்காமல் பட்டினியால் பூண்டோடு மடிந்து போனார்கள்.

கற்காலத்தில் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடிய மனிதன் பின்பு அவற்றை பழக்கப்படுத்தி தனக்கு உதவியாகவும். பயிர்செய்கையிலும் பயன்படுத்த ஆரம்பித்தான். காலப்போக்கில் நாகரீகங்கள் உருவாக ஆரம்பித்தபொழுது தன் கலாசாரத்தின் அடையாளமாகவும். மதத்தின் நம்பிக்கையாகவும் வைத்து கடைசியில் புசிப்பதில் தொடங்கி  பூஜிப்பதில் வந்து முடிந்தது.

இந்த நூற்றாண்டில் மாட்டுக்கறியை வைத்திருந்தான் என்பதற்காக 
சகமனிதனை அடித்து கொலைசெய்யும் அளவுக்கு மூர்க்கத்தனமான (குகை) மனிதர்களாகவே உள்ளோம். மனிதனின் மிருககுணம் என்றுமே மாறாது. என் என்றால் மனிதனும் அடிப்படையில்  மிருகம் தான்.

இந்த படத்தை சாதாரணமாக அணுகினால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இது ஒரு பின்நவீனத்துவ படம். இவன் நல்லவன், அவன் கெட்டவன், என்று இயக்குனர் வலிந்து நம்ப வைக்கும் காட்சிகளை திணித்து இருக்க மாட்டார். பாத்திரங்கள் அதன் போக்கில் நகரும். கதையை நாம் உள்வாங்கி கொண்டு கூடவே  பயணிக்கவேண்டியதுதான். (இல்லை ஓட வேண்டியதுதான் என்று சொன்னால் மிக பொருத்தமாயிருக்கும்)

கசாப்பு கடையில் அறுக்க போகும் கடைசி நிமிடத்தில் தப்பித்து விடும் எருமை மாட்டினை பிடிக்க அதன் பின்னே ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் இரவுபகலாக ஆக்ரோஷமாக ஓடித்திரிவது தான் கதை. இந்த குட்டிக்கதையை சேட்டன்கள் மிக சிறப்பாக படமாக்கியுள்ளார்கள்.  

ரியலிஸ்டிக்கா படத்தை ஆரம்பிச்சு சர்ரியலிசமாக படத்தை முடிச்சு இருப்பாரு இயக்குனர். இது தான் படத்தின் ப்ளஸும் மைனஸும். ஏன் மைனஸுனு சொல்லுறேனா ஒரு எருமை மாட்டை விரட்டிப்போகும் கூட்டம் கடைசியில் சேற்றில் மாட்டிக்கொண்ட மாட்டின் மீது சோம்பிகள் மாதிரி ஒருவர் மேல் ஒருவராக  விழுந்து...., விழுந்து சிறுகுன்றாக காட்சி அளிப்பது. ரியலிஸ்டடிக்கா நகரும் படத்தில் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குது. ஆனால் யோசித்து பாருங்கள் நாமே இவ்வளவு தூரம் சிந்திக்கும் பொழுது இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி அறியாமலா அப்படியொரு காட்சியை வைத்திருப்பார்? ஒரு இருபது பேர் மட்டும் விரட்டி பிடிக்குறமாதிரி செய்து லாஜிக்கை மீறாமல் எடுத்திருக்க  முடியாதயேன்ன?

எருமை மாட்டின் பின்னே ஒரு குட்டி டையனோசரை பிடிக்கும் அளவுக்கு மூர்க்கத்தனமாக அப்பகலிப்டோ ஹீரோ மாதிரி ஆன்டனியும், மற்றவர்களும் ஓடுவதை பார்க்கும் பொழுது நமக்கே என்னடா அநியாயத்துக்கு பில்டப் பண்ணுறிங்கனு மனசுல தோணும். போக போக இயக்குனர் எதோ சொல்ல வாராப்புள்ளனு விளங்கிடும். ஒரு வேலை அப்படி தோனலனா இந்த படம் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். மேல சொன்ன மாதிரிதான் இந்த படத்தை நேரடியாக அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும். ஒவ்வொரு காட்சியையும் ஊன்றி பார்த்தால் மட்டுமே அதன் ஆழத்தை உணர்ந்து அனுபவிக்கமுடியும். 

நான் ரசித்து காட்சிகளில் ஒரு சிலவற்றை மட்டும் சொல்லுறேன் 

மாட்டுக்கறி பையை சர்ச்சுக்கு முன்னால் உள்ள மரத்தில் மாட்டிவச்சிட்டு எல்லாரும் உள்ளே போய்ட்டு பிராத்தனையில் ஈடுபடும்  காட்சி. இதற்கு பல அர்த்தங்கள் இருக்கு.

இன்றொரு காட்சியில் மாட்டுக்கறியை ஒரு இந்து வீட்டுக்கு சப்ளை பண்ண போகும் ஆண்டனியை வீட்டுக்காரர். முன்வாசல் வழியா கொண்டு வராத பின்வாசல் வழியா போய்ட்டு கொடுன்னு சொல்லுறது. (அந்த விட்டு முற்றத்தில் ஒரு துளசி செடி மாடம் இருப்பதை பார்க்கலாம்)   

இன்னோரு காட்சியில் ஒரு தோட்டக்காரர் ஊர்காரங்க கலவரமாக மாட்டை தேடிட்டு போறதை பார்த்துட்டு. பாவம் அந்த வாயில்லா ஜீவன் அதுவும் இந்த பூமியில் வாழவேண்டாமா? அதை அதன் போக்கிலயே விட்டுருங்கனு ஜீவகாருண்யம் பேசிட்டு இருப்பாரு. அப்போ திடீர்னு எருமை மாடு அந்த வழியா மிரண்டு ஒடும் பொழுது அவரின் பயிர்களை நாசம் பண்ணிடும். உடனே எல்லா  கெட்ட வார்த்தையும் சொல்லி மாட்டை திட்டுவாரு. தனக்கு நஷ்டம் வந்தும் உடனே மனுஷன் மிருகமா மாறிடுவாரு.

விறுவிறுப்புக்கு மத்தியில் டார்க் ஹியூமருக்கும் குறைச்சல் இல்லை.
மாட்டை எதிர் பார்த்து எல்லாம் கடைதெருவில் பதுங்கியிருக்கும் பொழுது அச்சமயம் பார்த்து தமிழ் நாட்டுகார முதலாளி ஒருத்தர் வட்டிக்காசு வாங்க வந்து மாட்டிக்கிருவாரு. மாட்டை பிடிக்கும் கலவரத்தில் அது கடையெல்லாம் உடைச்சிடும் அந்த சமயத்துல கடன்காரன் முதலாளியை பிடிச்சு மாடுமேல தள்ளிவிட்டுருவான். அவரு தப்பிச்சு ஓடிடுவாரு..., மாடு முட்டி அந்த ஆளு செத்தால் அவனுக்கு வாங்குன கடனை திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரி நிறைய காட்சிகள் அங்கங்கே வந்து குபீர் என சிரிக்க வைத்துவிடும்.

கேமரா மேன் தான் பாவம் ! படம் முழுவதும் காடு, மேடுனு ஓடிக்கிட்டே படமாக்கி இருந்துருக்காரு. பின்னனி இசை, படத்தொகுப்பு எல்லாம் சிறப்பாகயிருக்கு. செம்ம மேக்கிங்!  

விட்டால் இன்னும் எழுதிட்டே போயிடுவேன் போதும் இதோட முடிக்கிறேன். அருமையான படம் தவறவிட்டுவிடவேண்டாம்.

நரேஷ்-38©

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I