Posts

Showing posts with the label Hindi movie reviews

Scared Games (2018)

Image
Season 1 No Spoilers  இந்த வெப் சீரிஸ்ச பற்றி பெரிதாக எதுவும் ஆராயாமல் பார்க்க முடிவு பண்ணுனேன். அதற்கு ரெண்டு பேர் காரணம் ஒன்னு நவாஸுதீன் சித்திக்கி மற்றையது அனுரக் காசியப். அதுவும் கேங்ஸ்டர் சப்ஜெக்ட்ன்னா சொல்லவே வேணாம். Gangs of Wasseypur பார்த்த மிரட்டலே இன்னும் அப்படியே மனசுலயிருக்கு. மாஸ்டர் பீஸ்! கிட்ட தட்ட அதே அனுபவம் தான் Sacred Games. அதை விடக்கதையை உள்வாங்கி புரிந்துகொள்ள கொஞ்சம் இலகுவாயிருக்கு.   கதை சுருக்கம் இதுதான்; கதை மும்பையில் நடக்குது Sartaj singh (Saif Ali Khan) நீதி நேர்மைன்னு வாழும் ஒரு போலீஸ் அதிகாரி. இதனாலேயே மேல் அதிகாரிக்கிட்ட சுமூகமான உறவுயில்லை. சில உறவு சிக்கல்களினால் மனைவியும் உடனில்லை. இவையெல்லாம் சேர்ந்து சர்தாஜ்யை  மனஅழுத்தத்துக்கு உள்ளாக்குது. இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காரு. ஏதாச்சும் பெருசா பண்ணி தன்னை நிரூபிக்கவேண்டிய இக்கட்டான தருணம். இந்த மாதிரி சூழ்நிலையில் மர்ம ஆசாமிகிட்டயிருந்து போன் கோல் வருது. "இன்னும் எண்ணி 25 நாள்ல இந்த மும்பை நகரமே அழிய போகுது. எல்லோரும் சாக போறாங்க! " முடிஞ்சா காப்பாத்துன்ன...

Pink | 2016 | Hindi Movie

Image
Pink 2016 / Hindi Movie ஒரு நல்ல படம், சிறந்த ஆசான். இப்படி இருந்தா நல்ல பொண்ணு, இப்படி எல்லாம் இருந்தா ஒழுக்கம் கெட்டவள் என்று நம்ம சமூகத்தில் சில அளவீடுகள் உண்டு. இரவில் பெண்கள் தனியாக வெளியில் போகலாமா?, கவர்ச்சியாக உடை அணியலாமா? , மது அருந்தலாமா? இது சரியா தவறா? என்பதையும் தாண்டி இந்த பெண்களின் பாலியல் சார்ந்த மனநிலை எப்படி? இவர்களை போன்ற  பெண்கள் இலகுவாக படுக்கைக்கு வர கூடியவர்களா? கவர்ச்சியாக உடை அணிந்து , சகஜமாக ஆண்களுடன் நெருங்கி பழகி மது அருந்தும் பழக்கமும் உள்ள ஒரு பெண்ணை, பொது புத்தி உள்ள ஆண் எப்படி பார்ப்பான்? இதை நம் சமூகம் எப்படி பார்க்கின்றது, அந்த பெண்ணின் மனநிலை என்ன? ஒரு பெண் ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்கின்றாள் என்றால் அது அவள்  முழுமனத்துடன் ஒத்துழைத்தாள் தான் உண்டு. மாறாக முடியாதுனா முடியாது தான்., அது மனைவியாக, காதலியாக  அல்லது விபச்சாரியாக இருந்தால் கூட இது பொருந்தும். சில விஷயங்கள் உணர்வுபூர்வமானவை அவற்றை  வார்த்தை கொண்டு விபரிக்க முடியாது. அதை அழகாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் Aniruddha Roy Chowdhury, இந்த படம் நவநாகரீக பெ...