Scared Games (2018)

Season 1
No Spoilers 

இந்த வெப் சீரிஸ்ச பற்றி பெரிதாக எதுவும் ஆராயாமல் பார்க்க முடிவு பண்ணுனேன். அதற்கு ரெண்டு பேர் காரணம் ஒன்னு நவாஸுதீன் சித்திக்கி மற்றையது அனுரக் காசியப். அதுவும் கேங்ஸ்டர் சப்ஜெக்ட்ன்னா சொல்லவே வேணாம். Gangs of Wasseypur பார்த்த மிரட்டலே இன்னும் அப்படியே மனசுலயிருக்கு. மாஸ்டர் பீஸ்! கிட்ட தட்ட அதே அனுபவம் தான் Sacred Games. அதை விடக்கதையை உள்வாங்கி புரிந்துகொள்ள கொஞ்சம் இலகுவாயிருக்கு.  

கதை சுருக்கம் இதுதான்;

கதை மும்பையில் நடக்குது Sartaj singh (Saif Ali Khan) நீதி நேர்மைன்னு வாழும் ஒரு போலீஸ் அதிகாரி. இதனாலேயே மேல் அதிகாரிக்கிட்ட சுமூகமான உறவுயில்லை. சில உறவு சிக்கல்களினால் மனைவியும் உடனில்லை. இவையெல்லாம் சேர்ந்து சர்தாஜ்யை  மனஅழுத்தத்துக்கு உள்ளாக்குது. இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காரு. ஏதாச்சும் பெருசா பண்ணி தன்னை நிரூபிக்கவேண்டிய இக்கட்டான தருணம். இந்த மாதிரி சூழ்நிலையில் மர்ம ஆசாமிகிட்டயிருந்து போன் கோல் வருது. "இன்னும் எண்ணி 25 நாள்ல இந்த மும்பை நகரமே அழிய போகுது. எல்லோரும் சாக போறாங்க! " முடிஞ்சா காப்பாத்துன்னு சொல்லி எச்சரிக்கை பண்ணுறான். முதல் சர்தாஜ்க்கு அவன் பேச்சில் நம்பிக்கையில்லை. பிறகு தான் யாருனு அவன் சொன்னதும் நம்பவேண்டிய கட்டாயம். பல வருசத்துக்கு முன்னாடி மும்பை நகரத்தையே கலங்கடிச்ச பயங்கரமான கேங்ஸ்டர் Ganesh Gaitonde (Nawazuddin) தான் அந்த துப்ப கொடுக்குறது. அதற்கு பிறகு அவன் சொன்னது உண்மையா? ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதையெல்லாம் கண்டுபிடிச்சி தடுக்க முடிஞ்சுதா இல்லையா? என்பது தான் கதை. கொஞ்சம் பழைய டெம்ப்லேட் தான் ஆனால் அதை சொன்ன விதமும்
நமக்கு கிடைக்கும் திரை அனுபவமும் புதுசாயிருக்கும்.

கேங்ஸ்ட்டர்னா பந்தி பந்தியா வசனம் பேசி காதுல ரத்தம் வரவைக்காம, ரெண்டு வார்த்தை. ஒரே போடுன்னு போய்கிட்டே இருப்பாங்க. கேங்ஸ்ட்டர் அல்லது சைகோ எல்லாம் ஒரு போலீஸ், டாக்டர் மாதிரி சாதாரணமா உருவாகமாட்டாங்க. அப்படின்னா அதற்குன்னு தனி பயிற்சியெல்லாம் கிடையாது. அது ஒரு மனப்பிறழ்வு நிலை. அவங்க இப்படி வரணுமென்று தீர்மானிச்சு வருவது கிடையாது. சின்ன வயதிலிருந்து அவர்களை சுற்றியுள்ள மனிதர்களும்  குடும்ப /சமூக சூழல் தரும் தாக்கங்கள் தான் பின்னாளில் அவர்கள் யார் என்பதை தீர்மானிக்குது.  அந்த வகையில் நவாசுதீனின்  கதாபாத்திரம் சிறப்பாக  உருவாக்கபட்டிருக்கும். சிறுவயதில் அவனுக்கு ஏற்படும் மோசமான சம்பவங்கள். அதனால் உண்டாகும் மனத்தாக்கம். 
முரட்டுத்தனமா வளரும் சிறுப்பிராயம் தொடக்கம். வளர்த்தப்பிறகு தான் யார் 
என்று உணர்ந்து அதற்கான பயணத்தில் முட்டுக்கட்டையா இருக்கும் ஒவ்வொருத்தனையும்  போட்டுத்தள்ளி. தனக்குனு தனிராஜ்ஜியத்தை எப்படி உருவாக்குறான் என்பதை ரணகளமா காட்டியிருக்காங்க. வன்முறை காட்சிகளும், உடலுறவு காட்சிகளும் பச்சையாகயிருக்கும்.  எந்த விதமான முடி மறைத்தலும் கிடையாது. நிஜத்தில் நடப்பதை  பார்க்கும் உணர்வு.

மதங்களை வைத்து நடக்கும் அரசியல். ராஜிவ் காந்தியை பற்றிய விமர்சனம். 
இந்திய அரசியலில் 70, 80 களில் நடந்த அரசியல், வரலாற்று சம்பவங்கள். முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே உருவான கலவரங்கள். 
அதற்கு பின்னரான அரசியல் காய்நகர்த்தல்கள். இந்துத்துவாவின் 
எழுச்சி. என பல உண்மைகளை வெளிப்படையாக பேசியிருக்கு இந்த தொடர். முடிவில் பல கேள்விகள்நமக்குள் எழும். சாதாரண கதையாக கடந்து போக முடியாது. மதம் தான் பெரிய வியாபாரம். அதன் மூலம் யாரையும் அடிமைப்படுத்தவும், அழிக்கவும் முடியும்.

கதை இறந்தகாலம், நிகழ்காலமென இரண்டு வேறுபட்ட காலகட்டத்தில் நிகழுது. Non liner முறையில் இரண்டு டைம் லைன்னிலும் மாறி, மாறி கதை சொல்லப்படும். இவ்விரண்டு காலத்தையும் Match Cut மூலமாக தொகுத்து இருப்பாங்க. நுணுக்கமான எடிட்டிங். எடிட்டர் மிக நேர்த்தியா வேலை பண்ணிருக்காரு. ஒவ்வொரு Cut ம் அருமை. இதற்கு இயக்குனரின் சிறப்பான திரைக்கதை தொகுப்பும் முக்கியமானதொரு காரணம். 

Saif Ali khan, Radhika Apte, Nawazuddin siddiqui மூவரின் நடிப்பும் சிறப்பு. அதுலயும் நவாசுதீனை பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த கேரக்ட்டர் கொடுத்தாலும் கனகச்சிதமா பொருந்தி போறாரு மனுஷன். இந்த கதையில் இன்னோரு சிறப்பு யாருக்கும் எதுவும் நடக்கலாம். யாரோட உயிருக்கும் உத்தரவாதமில்லை. கதைக்கு தான் நடிகர்கள், நடிகர்களுக்கு கதையில்லை. 

விக்ரம் சந்திராவின் (Vikram Chandra) Scared Games என்னும் நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு அனுரக் காசியப் மற்றும் விக்ரமாதித்ய மொட்வானி இருவரும் சேர்ந்து இயக்கிருக்காங்க. அருமையான ஸ்கிரிப்ட் கடுமையாக உழைச்சிருக்காங்க. ரியலிஸ்ட்டிக்கா இருக்கும் தவறவிடாமல் பாத்துருங்க.

பின்குறிப்பு: சில கேள்விகள் குழப்பங்களுடன் தான் முதல் சீசன் முடியுது. இரண்டாவது சீசனில் இன்னும் வெறித்தனமிருக்குமென்று நம்புறேன். 

நரேஷ்-37©

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I