மிகைல் A . I

(குறுங்கதை - 10) மிகைல் நா கார்த்திக்க வெடிங் பண்ணலான்னு நினைக்கிறேன். எட் த சேம் டைம்..., ராஜ் உம் என் மேல இன்ட்ரெஸ்டா இருக்கான். இவங்க ரெண்டு பேரும் எனக்கு பிடிச்ச மாதிரிதான் இருக்காங்க..., கார்த்தியோட செட்டில்லாகத்தான் மனசு சொல்லுது, பட் ராஜ்கிட்ட இருக்க கேரிங் எனக்கு பிடிக்கும். ஒரே கன்பியுஸ்ட்டாயிருக்கு, இந்த விசயத்துல எனக்கு உன் அட்வைஸ் வேணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ ! தாராளமாக ரியா...., என்னிடம் நீ அனுமதி கேட்கத் தேவையில்லை. சில தனிப்பட்ட தகவல்களை எல்லாம் ஆராய்ந்துப் பார்க்கவேண்டும் அதனால் கூடுதல் அதிகாரம் தேவை. டர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ன ரீட் பண்ணிட்டு அக்செப்ட் பண்ணு. மிகுதியை நான் பார்த்து கொள்கிறேன். "ஓகே, இந்த விஷயம் ரகசியமா இருக்கட்டும்..., முக்கியமா கார்த்திக்கு தெரியக் கூடாது, அவனுக்கு எல்லாத்துக்கும் மெஷின்ச நம்பிட்டு இருக்கது பிடிக்காது" என்று சொல்லியப்படி ரியா தன் ஆர்ட்டிப்பிசல் இன்டலிஜெண்ட்டுக்கு தேடுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கினாள். மிகைல் இணையவெளியில் தனக்கு தேவையான தகவல்களை அ...