பிணந்தின்னிகள்
என் நிர்வாண உடலை ஊரே கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. நான் எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன நடந்தது? எதுவும் விளங்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்து கொண்டிருக்கின்றேன் ஆனால் முடியவில்லை. என் உடல் நிலத்தில் கிடையாக வானம் பார்த்தப்படி கிடக்கிறது. கைகளும் கால்களும் நான்கு திசையிலிருந்த மரத்துடன் சேர்த்திழுத்து அசைக்க முடியதாப்படி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவர்கள் ஒரு பக்கம் கயிராக எனது மார்புக்கச்சையை பயன்படுத்தியிருக்கிறார்கள். யோனியிலிருந்து வடிந்த குருதி நிலத்தில் படிந்து சிகப்புத்திட்டுகளாக காய்ந்து போயிருந்தது. அதில் எறும்புகளும், ஈக்களும் தங்களுக்கான ஆகாரத்தை தேடிக்கொண்டிருந்தன, இத்தனை நடந்தும் நான் எவ்வித வலியையும் உணரவில்லை. ஒரு நாளுக்கு மேலாக இங்கே கிடக்கிறேன். உடல் உப்பி, அழுக தொடங்கிவிட்டது போல? கூடியிருந்த சனம் மூக்கை மூடிக்கொண்டதை கவனித்தேன். கடுமையான துர்நாற்றம் காற்றில் கலந்திருக்க கூடும். எனக்கு இப்பொழுது எழுந்திருக்க வேண்டும். ஆனால் என் கட்டுக்களை அவிழ்த்துவிடயாரும் முயற்சிக்ககூட இல்லை. வெறுமனே வேட...