இஃக்லூ | 2019 | தமிழ் படம்

இஃக்லூ 2019 / தமிழ் படம் ஸ்பாய்லர்ஸ் இல்லை ஆனால் எச்சரிக்கை பண்ணுறேன் மனச கல்லாக்கிட்டு இந்த படத்தை பாக்குறதுனா பாருங்க இல்லாட்டி தவிர்த்துருங்க. நான் பார்த்துட்டு ஒரு நாள் முழுவதும் படத்தோட தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியாம தவிச்சேன்! சில சமயங்களில் என்னத்த மெச்சூர்ட் ஆகிட்டோம்? இன்னும் சின்னபுள்ளையாட்டம் படம் பார்த்து அழுதுட்டு இருக்கமேனு வெட்டகமாயிருக்கு! சமீப காலத்துல வந்த தமிழ் படங்களில் அருவி படத்துக்கு பிறகு என்னை ரொம்ப அழுகவச்சபடம் இதுதான். கண்ணு கலங்குறதுக்கும், அழுறதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு ஒரு கணம் கண்ணீர் துளி எட்டிப்பார்த்துட்டு போறதுக்கும். தொடர்ச்சியாக வழியிறதுக்கும் உள்ள வேறுபாட்டதான் சொல்லுறேன். நிறைய படங்கள் கண்ணை கலங்க வச்சிருக்கு ஆனால் இந்த படம் அழுகவச்சிருச்சி! இத்தனைக்கும் பிற மொழிகளில் அழுவாச்சி படமுன்னு கேள்விப்பட்டால் தவிர்த்துருவேன். ஆனால் தமிழ் படமுன்னு வரும் போது அதை பண்ணமுடியாதே, இங்கு எப்பயாச்சும் ஒரு நாள் தான் இந்த மாதிரி நடக்கும். இவ் வகையான சில படங்களை பார்க்கும் போது கற்பனை கதை என்பதையும் மறந்து கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளை...