இஃக்லூ | 2019 | தமிழ் படம்


இஃக்லூ
2019 / தமிழ் படம்

ஸ்பாய்லர்ஸ் இல்லை ஆனால் எச்சரிக்கை பண்ணுறேன் மனச கல்லாக்கிட்டு இந்த படத்தை பாக்குறதுனா பாருங்க இல்லாட்டி தவிர்த்துருங்க. நான் பார்த்துட்டு ஒரு நாள் முழுவதும் படத்தோட தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியாம தவிச்சேன்!

சில சமயங்களில் என்னத்த மெச்சூர்ட் ஆகிட்டோம்? இன்னும் சின்னபுள்ளையாட்டம் படம் பார்த்து அழுதுட்டு இருக்கமேனு வெட்டகமாயிருக்கு! சமீப காலத்துல வந்த தமிழ் படங்களில் அருவி படத்துக்கு பிறகு என்னை  ரொம்ப அழுகவச்சபடம் இதுதான். கண்ணு கலங்குறதுக்கும், அழுறதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு ஒரு கணம் கண்ணீர் துளி எட்டிப்பார்த்துட்டு போறதுக்கும். தொடர்ச்சியாக வழியிறதுக்கும் உள்ள வேறுபாட்டதான் சொல்லுறேன். நிறைய படங்கள் கண்ணை கலங்க வச்சிருக்கு ஆனால் இந்த படம் அழுகவச்சிருச்சி!
இத்தனைக்கும் பிற மொழிகளில்
அழுவாச்சி படமுன்னு கேள்விப்பட்டால் தவிர்த்துருவேன். ஆனால் தமிழ் படமுன்னு வரும் போது அதை பண்ணமுடியாதே, இங்கு எப்பயாச்சும் ஒரு நாள் தான் இந்த மாதிரி நடக்கும்.

இவ் வகையான சில படங்களை பார்க்கும் போது கற்பனை கதை என்பதையும் மறந்து கதாபாத்திரங்களையும்
நிகழ்வுகளையும்  ரொம்ப தீவிரமா உள்வாங்க ஆரம்பிச்சிடுறோம். சில மணிநேரங்களுக்கு கதை நம்மை வேறு ஒரு நிழல் உலகத்துக்குள்ள கூட்டிட்டு போயிடுது.

கடவுள் நமக்கு ஆசிர்வதிக்கப்பட்ட  வாழ்க்கையை கொடுத்துயிருக்காரு அதை கொண்டாடாமல் அழகான உறவுகளை ஈகோ, இன்னும் பிற சில்லித்தனமான காரணங்களை முன்னிலைபடுத்தி சிதைச்சுகிட்டு இருக்குறோம். இதை ஏன் சொல்லுறேனு படத்தை பார்த்து முடிஞ்சதும் நீங்களே  புரிஞ்சுக்கிடுவிங்க...

இந்த படத்துல ஹீரோயினா நடிச்ச பொண்ணு ரொம்ப நல்லா பண்ணிருக்கு சத்தியமா அந்த கதாபாத்திரத்துல இருந்து வெளிய வர ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும். அநேகமா ஹீரோவும் மனரீதியா பாதிக்கபட்டிருக்கலாம். ஏன்னா கதையோட கணதி அதிகம்.
The Fault in our stars படத்துல உணர்ந்த வலியை இந்த படத்துல அதிகமா உணர முடிஞ்சுது. ஆனால் அந்த படத்துக்கும் இதுக்கும் கேன்சர், லவ் தவிர வேறு ஒற்றுமைகள் இல்லை இரண்டு வேறுபட்ட கதைக்களம். இஃக்லூ நம்ம ஊரு கதைனாலே நல்லா தொடர்புப்படுத்திக்க முடியுது. எமோஷனல் பீல் ம்ம்ம்ம்ம்... இல்லை, வலினு சொன்னா ரொம்ப பொருத்தமாயிருக்கும் கொஞ்சம் அதிகம்தான்.

பொதுவா எனக்கு ஒரு படம் தொடங்கி முதல் பதினைந்து  நிமிடங்கள் போதும். மேற்கொண்டு பார்க்கலாமா, வேணாமான்னு முடிவு பண்ணுறதுக்கு.
ஆனால் இந்த படத்தின் முதல் ஐந்து நிமிடத்திலேயே கதையோட ஒன்றி போயிட்டேன். தொடக்கத்திலேயே நமக்கு  மனசுல ஒரு கேள்வியை உருவாக்கி, அதற்கு விடை சொல்லுறேன்னு மெது, மெதுவா கத்தியை நெஞ்சுல சொருகி பின்பு உருவும் கதை சொல்லல் முறை. ஒரு சாதாரண கதையில எந்த அளவுக்கு அழுத்தத்தை உண்டாக்கமுடியும் என்பதில் தான் இதன் வெற்றியிருக்கு. அந்த வகையில் இயக்குனர் சாதிச்சிட்டாரு! சில முரண்பாடுகள்  இருந்தாலும் பெருசா கண்டுக்க  தோணல, துயரப்படவே நேரம் சரியா இருந்துச்சி.

கதை ரொம்ப சிம்பிள். தமிழுக்கு புதுசு இல்லை. படம் தொடக்கத்திலே இது தான் நடந்திருக்கணும்னு அனுமானிச்சிடலாம். இருந்தாலும் கதை சொன்ன வீதம் மனதை கசக்கி பிழிஞ்சிடும். கதையை நான் இங்கு சொல்ல போறதுயில்லை. என்ன மாதிரியான படமுன்னு ஒரு யூகத்தை சரி பூடகமாக சொல்லிடுறேன்.

"காதல், கல்யாணம், வலி, ஊடல், பேரிழப்பு, கேன்சர், பெரும்துயரம், பேர்அன்பு, வாழ்கை, விதி" 

இவ்வளவு தான் படம்.

கொஞ்சம் கெட்ட வார்த்தை, லிப் லாக்,
குடி/புகைத்தல் கேடு என்னும் எச்சரிக்கை வாட்டர் மார்க் இல்லாத சினிமா நிதர்சனத்துக்கு அருகில் போய்ட்டு வருது.
" மறைத்து காட்டுவதை விட திறந்து
வைத்தல் ஆரோக்கியம் "
தியேட்டரில் வெளியிடப்படாதலால் சென்சாரின் கெடுபிடிகளில் இருந்து தப்பிவிட்டது போலும்.

சிலாகித்து கொண்டாட வேண்டிய படைப்பு வாழ்த்துக்கள் இயங்குனர்
பரத் மோகன் சார் நெஞ்ச தொட்டுடிங்க!

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I