மஜ்னூன் குறுங்கதைகள் - வாசிப்பனுபவம் - சே.தண்டபாணி

(கிண்டில் பதிப்பு)
பக்கங்கள்-117

நம் குழுவில் இருக்கிற வாசிப்பு புலிகளில் ஒருவர் நரேஷ். இந்நூலின் லிங்க்கை வில்லு பட வடிவேலு கிணற்றில் வாளியைத் தொங்கவிடும்போது எட்டிப் பார்ப்பது போலப் பதிவிட்டார். அப்போதுதான் இவரை எனக்கு முதன்முதலாகத் தெரியும். படிக்கலாம் என்று குறித்துக் கொண்டேன். ஆனாலும் நிறைய புத்தகங்கள் அடுத்தடுத்த கிடாய் வெட்டுக்குத் தயாராக துளுக்கு போட்டு வைத்திருந்ததால் இந்நூலை ஓரமாக கிண்டிலில் கட்டி வைத்தேன். பிறகு இப்போட்டிக்குள் உலகமே அழிந்தாலும் வாசித்துவிட வேண்டும் என்ற சங்கல்பத்துடன் நேற்று வானம் கடமுடவென்று அறற்றியபோதும் வாசித்து முடித்துவிட்டேன். பதிவு எழுதுவதற்குள் மின்னல் பளீரென்றதால் எங்கேபோன் புகைந்துவிடுமோ என்று ஆப் செய்துவிட்டேன்.

பொறுமை காத்த வாழும் புத்தர் நரேஷ்க்கு நன்றி. கவிதை,சிறுகதைகள்,கட்டுரைகள்,நாவல் இதைத்தாண்டிய குறுங்கதைகள்தான் இத்தொகுப்பு. சில வரிகளிலேயே கதை எழுத வாய்பிருக்கு ராஜா என நரேஷ் நிரூபித்துள்ளார். 

இதில் வரும் பேய் பற்றிய கதை சற்றே பஷீரையும் போகன் சங்கரையும் அங்கிட்டு போய் வெளாடுங்கப்பா என்று சொல்கிறது.

வலிகளை நிணம் கிளற வைத்த கதை பினந்திண்ணிகள்.. இத்தொகுப்பிலேயே மிகச்சிறந்த கதை. இதன்மூலம் மேலும் பல சிறுகதைகள் எழுத வாழ்த்துகிறேன்.
இது ஒரு வகையில் கேலிக்குரிய மனிதனின் கனவு-தஸ்தாயேவ்ஸ்கி, எம்.ஜி.சுரேஷின் 37ல் வரும் மாஜி மாமாவின் கதை சொல்லல் பாணியை நினைவு கூர்ந்தது

மிகைல் A.I கதை ஒரு நல்ல அறிவியல் புனைகதை.

ஒரு கடிதம் கதை இத்தொகுப்பிலேயே ஆழ்ந்து நான் மிகவும் ரசித்து ரசித்து வாசித்த கதை.

மொத்த தொகுப்பில் முக்கால்வாசி அட்டகாசமான கதைகள்.அன்றாட வாழ்வில் கடந்த தருணங்களின் கண்ணாடிக்குப் பின்பு அப்பியிருக்கும் சிவப்பு ரசம் போல ஒளித்து வைத்து எழுத்தில் கொடுத்திருக்கிறார். இப்படித் தேர்ந்து எழுதுவதற்கு அவருடைய வாசிப்பே கைகொடுத்திருக்கிறது.

கிண்டில் அன்லிமிடெட்டில் கிடைக்கிறது.

கண்டிப்பாக முதல் தொகுப்பு போடுகிறேன் என்று எதையாவது எழுதி வைத்திருப்பவர்கள் வாசித்து கற்றுக் கொள்ள வேண்டிய நூல்.

வாழ்த்துகள்ங்க. இன்னும் சிறுகதை,நாவலுக்குள்ளும் வந்து வெளாடுங்க

-சே. தண்டபாணி தென்றல்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I