மஜ்னூன் குறுங்கதைகள் வாசிப்பனுபவம்

தோழி பிரியதர்சினியின் வாசிப்பனுவம் 

புத்தகம் :  மஜ்னூன் (கிண்டில் பதிப்பு)
ஆசிரியர் : நரேஷ் 
பக்கங்கள் : 117

நரேஷ்...., நம்ம "வாசிப்பை நேசிப்போம்" குழுல ஒரு தேர்ந்த வாசிப்பாளர். அவரோட தொடர் வாசிப்பும், மத்தவங்க விமர்சனங்களுக்கு குடுக்குற ஊக்கமும் எப்போதும் கவனிச்சதுண்டு.

ஆனா இன்னைக்கு நானே கவனிச்சேன், அவர் ஒரு குறுங்கதை தொகுப்பு எழுதிருக்காரு. அதை எங்கையுமே என்னை வாசிக்க சொல்லி சொல்லல. நானே கவனிச்சு வாசிக்க ஆசைப்பட்டேன்.

முதல் புத்தகம்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு வார்த்தைகள் அவருக்கு கைகுடுத்துருக்குனு சொல்ல முடியும். எல்லாமே ஒரு பக்கக்கதை. ரசிக்கும் படி இருந்தது. ஒரே மூச்சில் வாசிக்க முடியும். சளிப்பே கொடுத்திராத எழுத்து நடை. முதல் புத்தகத்துல இவளோ எதிர்பாக்கல.

எழுத்துக்கான அங்கீகாரத்தை எதிர்பாக்காம தொடர்ந்து எழுதுங்க. ஒரு படைப்புக்கும் அடுத்த படைப்புக்குமே உங்களுக்கு வித்யாசம் தெரியும். அதை யாருமே சொல்லித்தர வேண்டாம். அப்டி வருவது தான் பக்குவம். சொல்லித்தெரியாமல் இருப்பது மன்மத கலை மட்டும் இல்லை எழுத்துக்கலையும் தான்.

எல்லா பகுதியையும் தொட்டு எழுதணும்னு நினைச்சது சரி. ஆனா ஆரம்பகட்ட முயற்சில, ஒவ்வொரு பகுதியா போகலாம். இது என்னோட யோசனை 

மற்ற படி புத்தகத்துல, ஒன்னு இரண்டு கதைகளைத் தவிற பெரும்பாலான கதைகள் எனக்கு பிடிச்சுது... தலைப்பை மட்டும் குறிப்பிடுறேன்.

பேய்க்கதை
பழைய எழுத்தாளரும் புதிய எழுத்தாளரும்
மிகைல் AI
இறந்த (நிழல்) காலம்
நரகம்
பிணந்திண்ணிகள்

இன்னும் நிறைய இருக்கு. முதல் முயற்சியே நல்ல வெற்றியுடன் கூடிய தொடக்கமா இருக்கு. ரொம்ப மகிழ்ச்சி ❤

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I