மஜ்னூன் - சுகந்தியின் வாசிப்பனுவம்

புத்தகம் : மஜ்னூன் (மின்னூல்)
ஆசிரியர்: நரேஷ்

மாட்டு பொங்கலுக்கு மொத்தமா வடை பாயாசம் பழம் விதவிதமான காய்கறிகள் சோறு குழம்பு பூசணிக்காய்  எல்லாத்தையும் பிசைந்து உருண்டையாக குடுப்பாங்க. ஒரு வாய்க்கு ஒரு மாதிரியான ருசியில் இருக்கும் .
அது மாதிரி இருக்கு  இந்த புத்தகம் .
விரக்தி 'அமானுஷ்யம்' சுற்று சூழல்' நகைச்சுவை,கோபம் ,இயலாமை, அறிவியல், தத்துவம் ,காதல் ,காமம், பழி ,கொலை, ஏலியன், மறுபிறவி ,வறுமை. ஏமாற்றம், வன்கொடுமை என அத்தனையும் கலந்து‌ கட்டியிருக்கார். அதிலும் ஒன்று, இரண்டு,மூன்று  வரிகள், மூன்று வார்த்தைகளில் வரும் கதைகள் எல்லாம் செம!
புதிய எழுத்தாளரும்‌ பழைய எழுத்தாளரும் உரையாடல் சரியான காமெடி!
    
பிரசர்‌ குக்கர் கதையில்  கார்ப்பரேட் கம்பெனிகளில் முழி பிதுங்குபவர்களின் நிலையை சொல்லியிருப்பது 
மன அழுத்தத்தின்‌ வெளிப்பாடு

"மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்டு, தன் பிம்பம் கரைவதைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகைத்தபடியே வெளிவருவார்கள். அந்த கணம் தங்கள் சுயமரியாதை நீங்கி மனம் இலகுவானதை உணருவார்கள்."
 A,lன்னும் 0,1ன்னும் கூட்டும்,
 ஏழுநிமிடங்களில் வரும் ஏலியனும்   சிரிப்பை அடிக்க‌ முடியலை.
 சோரம் போனவள் இல்லை ,சோரம் போனவள்(ன்) 

இந்த புத்தகத்தில் மிகப்பிடித்தமான குட்டிக்கதை மிடில் கிளாஸ்
சொந்தமாய் வீடு வேண்டும் , திருமணம் செய்வதற்கு முன் வீட்டை கட்டிடனும் என்று ஆசைப்பட்டு வீட்டுக்கடன் , கல்யாணக்கடன் ‌ என்று கடன் சுமை அழுத்தம் தாங்காமல் எதையும் அனுபவிக்காமல்  அழுத்ததம் கூடி எல்லாம் இழந்த நிலையில் நடமாடுவான்.
    "  வீடு கட்டினான், 
    திருமணம் முடித்தான், 
    செத்துப்போனான். "*** இது ஹைக்கூ மாதிரி இருக்கு.
    (யப்பா முடியல மூனே‌ வார்த்தைக்கு இவ்ளோ‌பெரிய விளக்கம்.)
      மஜ்னூனின் மறு பிறப்பில், அவன் காதலியின் இறுதி முடிவை எதிர்நோக்குபவளுக்கு விதி
    மீறல் செய்து விடுதலை தருகிறான்.
    
      வறுமையில் உழலும் குடும்பத்தில்
       ஒரு சிறுவனின் கண் எதிரில் நடக்கும் தாயின்‌ மீதான  தந்தையின் வன்முறையை  எதிர்க்க முடியாமல் கடவுளிடம் வேண்டுகிறான்.
"கடவுளே இன்னைக்கு சண்ட வரக்கூடாது " 
" அப்பா குடிச்சிட்டு வரக்கூடாது " 
"சண்ட வரக்கூடாது"

 ஆனால் கடவுளுக்கு காதே கேட்பதில்லை.
 
பிணந்தின்னிகள்...  சிறு பெண் வண்புனர்வால் இறந்து போகிறாள் .பிணமே பேசுவது போல் கூறும் நிகழ்வில்
 இவர்கள் மனிதர்கள் தானா?

வலியால் துடித்து‌ கெஞ்சுபவளின்‌ வாயில் மண்ணையள்ளிப் போட்டு அடைப்பது மிருகத் தனத்தின் உச்சம்.

    "என் உயிர் பிரிந்தது கூடத்தெரியமால் பிணத்தை 
      புணர்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களும் 
      பெண்ணின் யோனி வழியே வெளிவந்து, 
      முலையில் பாலுண்டவர்கள் தான்." என்று 
      
கடைசியில்‌ புத்தரை பதில் சொல்ல முடியாத கேள்வியை கேட்டு வாயை அடைத்தாயிற்று.

 நிறைய இடங்களில் சிரிப்பை தவிர்க்க முடிய வில்லை.
 ஒரு சில இடங்களில் இயல்பாக இலங்கை தமிழ் வந்து விடுகிறது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I