கடலும் கிழவனும் (The old man and the sea)


கடலும் கிழவனும் (குறுநாவல்)
The old man and the sea

எர்னெஸ்ட்  ஹெமிங்வே எழுதிய நோபல் பரிசு வென்ற இலக்கிய படைப்பான
"The old man and the sea" குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான "கடலும் கிழவனும்" படித்தேன். அருமையான அனுபவம். தமிழ் மொழிபெயர்ப்பில் 130 பக்கங்கள், ஆங்கிலத்தில் வேறும் 34 பக்கங்கள் மட்டுமே (Ebooks). பிறகு ஆங்கில மூலத்தையும் வாசித்தேன். முதல் முதலில் நான் ஆங்கிலத்தில் படித்த நாவல். ம்ம்ம்.... மொசமில்லை நமக்கும் புரியுது. இது நல்ல ஒரு ஆரம்பம் தான். 

இவ் அற்புதமான படைப்பை பற்றி ஒரு நாலு வரி நல்லதா எழுதிட்டு போகலாம்னு தோணுது. ஒருநாள் இந்த புத்தகம் உங்கள் கைகளுக்கு வரும் போது என்னுடைய பதிவை வாசித்த ஞாபகம் வந்து ஒரு வேலை வாசிக்ககூடும். தமிழிலே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கு, ஆங்கிலத்திலும் பிற உலக மொழிகளிலும் சேர்த்து கோடிகளை தொட்டுவிடும். இன்றைய திகதியில் ஆரம்பித்தாலும் படித்து முடிக்க நம் ஆயுள் காலமே போதாது! யாராச்சும் நாலு பேர் தொடர்ந்து ஒரு புத்தகத்தை பற்றி எழுதும் பொழுதுதான் நமக்கு படிக்க தோணும். எனக்கு இந்த புத்தகம் சில வருடங்களுக்கு முன்பு இதை போன்று ஒரு நண்பரின் முகநூல் பதிவில் அறிமுகமாகியது. நாவலின் தலைப்பே  என்னை கவர்ந்துவிட்டது. படிக்கும் ஆசை தொற்றி கொண்டாலும் சவூதி அரேபியாவில் தமிழ் புத்தகம் கடை எல்லாம் கிடையாது. வெளியூரில் இருந்து வரவழைப்பதும் சிலவு மிகுந்த வேலை. என்னுடைய Want to Read List ல சேர்த்து வைத்திருந்தேன் ஒருநாள் கட்டாயம் வாசிக்கனுமுனு.

அந்த நாளும் வந்தது. கதை ரொம்ப சாதாரணமானதுதான் ஆனால் அதை உயிர்ப்பூட்டிய வீதம் நாவலை கிளாசிக்காக மாற்றிவிட்டது. ஒரு ஏழை மீனவ கிழவனான சேண்டியாகோ என்பதினான்கு நாட்களாக கடலுக்கு போறான் மீன் எதுவும் பிடிபடாமல் திரும்பிவரான். குடும்பம், பிள்ளை குட்டின்னு ஒன்னுமில்ல தனிமரம். மீனவக்கிராமத்து சிறுவனான  மேனோலின் மட்டுமே அவன் நண்பன், சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் கிழவனோடு கடலுக்கு போய்ட்டு இருந்தான். அவனின் அப்பா கிழவன் கூட நீ இனிமே போகவேண்டாம் வேறு படகு ஒன்னு பார்த்துக்கோ. கிழவன் அதிர்ஷ்டமில்லாதவன் என்று சொல்லி தடுக்க. பெற்றோரை மீறி என்னால் என்ன செய்ய முடியும் என்று கிழவனிடம் சொல்லி நொந்து கொண்டான். கிழவனுக்கு சிறுவனின் தூய்மையான நேசத்தை பற்றி தெரியும். குறைபட்டு கொள்ளவில்லை. நீ அந்த படகிலேயே போ.... அது ராசியான படகு, நேற்று எத்தனை மீன் பிடிச்சீங்கன்னு சிறுவனிடம் கேட்டு தெரிந்து கொண்டு சிறுவனை தேற்றுவான்.

மீன் கிடைக்கலையேன்னு மனச தளர விடாமல். வழமைபோலவே அன்றும் கிழவன் நம்பிக்கையுடன் கடலுக்கு போறான். (ஆழ்கடல்) தூண்டில்களை போடுறான் சில மணிநேரம் காத்திருப்புக்கு பின்னர் ஒரு பெரிய மெர்லின் மீன் மாட்டுது, பெருசுனா படகைவிட!  கிழவனை படகுடன் சேர்த்து இழுத்துட்டு போகும் அளவுக்கு வலிமையான பெரிய மீன். கிழவனும் விடுறமாதிரியில்லை அதன் போக்கிலேயே போய்ட்டு தன் அனுபவத்தையே ஆயுதமா மாற்றி போராடுறான். ஒரு நாள், இரண்டு நாள் ஆகியும் முடிவுக்கு வந்தபாடில்லை. இதற்கு நடுவில்  மீனுக்கும் கிழவனுக்கும் இடையே நல்ல நட்பும் உருவாக்குகின்றது. ஒரு கட்டத்தில் மீன் மேல் கிழவனுக்கு மதிப்பும், அன்பும் பெருகுகின்றது. ஏன்? எப்படி? என்பதை நீங்களே படித்து  பூரிப்பு அடையுங்கள். ஆனால் போராட்டம் முடிந்தபாடில்லை ரெண்டு பேரும்  களைப்படைந்து துவண்டு போகின்றார்கள். முடிவில் யார் வென்றது? கிழவனால் மீனை பிடித்த கொண்டு உயிருடன் கரை திரும்ப முடிந்ததா? இல்லையா? என்பதுதான் கதை. (இந் குறுநாவல் fiction மட்டுமே fantasy கிடையாது) இது நூல் அறிமுகம் என்பதால் முழுக்கதையும் விபரித்து உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை.

எர்னெஸ்ட் நாவல் முழுவதும் மூன்று பிரதான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து கதையை நகர்த்துவார் ஒன்று கிழவன், மற்றைய இரண்டு பேர் சிறுவனும், மீனும். நாவலில் பெரும்பாலும் கிழவன் தனக்கு தானேயும், மீனுடனும் பேசிக்கொண்டு இருப்பான். மிகுதியான சம்பவங்கள் எல்லாம் கடலிலேயே நிகழ்வதே அதற்கு காரணம். ஒரு நாவல் முழுவதையுமே மீனவனின் வாழ்வில் இருந்து தெளிவான சொல்லாடலில் விவரித்த வீதம் செம்மை. ஒருவேளை எர்னெஸ்ட் மீனவனா இருந்து இருப்பாரோ என்னவோ? அருமையான படைப்பு அருமைனு சொல்லுவதும் ரொம்ப சின்ன வார்த்தைதான் என்பதை நாவலை படிக்கும் போது உணருவீங்க.

பின் குறிப்பு: இணையத்தில் இலவசமாக கிடைக்கும்.


Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I